டோக்கியோ சீமெந்து தனது 2026 விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு மகுடம் சூட்டியது

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு மகுடம் சூட்டியது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சிறந்த விற்பனையாளர் 2026 எனும் உயர் விருதை யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் பெற்றுக் கொண்டது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை கிளிநொச்சி சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் குருநாகல் நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ் ஆகியன பெற்றுக் கொண்டன. மொத்தமாக 135 சிறந்த விற்பனையாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

image
சிறந்த விற்பனையாளர் 2026 – யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் சார்பாக வழங்கப்பட்ட விருதை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்வதை காணலாம்.

டோக்கியோ சீமெந்து குரூப் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். குழுமத்தின் முகாமைத்துவ குழு மற்றும் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் அணிகளின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து விநியோக நாளிகையின் சகல அங்கத்தவர்களையும் இந்நிகழ்வு ஒன்றிணைத்திருந்ததுடன், சகலருக்கும் நினைவில் நிலைத்திருக்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில் களிப்பூட்டும் நிகழ்வுகள் அடங்கியிருந்ததுடன், டோக்கியோ சீமெந்து விற்பனை வலையமைப்பின் சிறந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ கப்ரால் நிகழ்வில் உரையாற்றுகையில், நிறுவனத்திற்கும் அதன் நாளிகை பங்காளர்களுக்குமிடையே காணப்படும் உறவின் வலிமையை பாராட்டியிருந்தார். நம்பிக்கை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இது கட்டியெழுப்பப்பட்டதுடன், சவால்களை ஒப்பற்ற நம்பிக்கையுடன் கடந்து வந்திருந்தமையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

image
இரண்டாமிடம் – டோக்கியோ சீமெந்து விற்பனையாளர் மாநாடு 2026 – கிளிநொச்சி, சண்முகம் ஸ்ரோர்ஸ்

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் நாடு முழுவதையும் சேர்ந்த சகல விற்பனையாளர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்திருந்ததுடன், அண்மைக் காலங்களில் நிலவிய வியாபார தடங்களுக்கு மத்தியிலும், தொழிற்துறையின் தலைமைத்துவத்தை டோக்கியோ சீமெந்து நிறுவனத்துக்கு தக்க வைத்துக் கொள்ள ஏதுவாக அமைந்திருந்ததை குறிப்பிட்டார். நிறுவனத்தின் விற்பனை பங்காளர் வலையமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதற்கான டோக்கியோ சீமெந்தின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் மீள உறுதி செய்திருந்ததுடன், அவர்களுக்கு வெற்றிகரமாக உதவுவதற்கும் உறுதியளித்திருந்தார். டோக்கியோ சீமெந்து மற்றும் அதன் விற்பனையாளர்களுக்கிடையே நீண்ட காலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையை பாராட்டியதுடன், பகிரப்பட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் நிறுவனம் செயலாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

தனது பெறுமதி வாய்ந்த விற்பனை விநியோக வலையமைப்பின் சாதனைகளை கொண்டாடும் வருடாந்த நிகழ்வாக விற்பனையாளர் மாநாடு அமைந்துள்ளது. உள்நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட வியாபாரம் எனும் வகையில், தேசிய பொருளாதாரத்துக்கு தனது பெறுமதி சங்கிலியினூடாக வலுவூட்ட டோக்கியோ சீமெந்து குழுமம் எதிர்பார்ப்பதுடன், அதில் நிறுவனத்தின் விற்பனையாளர்கள் முக்கியமான பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

image
மூன்றாமிடம் – டோக்கியோ சீமெந்து விற்பனையாளர் மாநாடு 2026 – குருநாகல், நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ்

ஒன்றிணைந்து குழுமம், பெருமைக்குரிய மற்றும் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்களான NIPPON CEMENT, TOKYO SUPER, NIPPON CEMENT PRO மற்றும் ATLAS CEMENT ஆகியவற்றை கட்டியெழுப்பியுள்ளது. அதன் முன்னணி தயாரிப்பான TOKYO SUPER Cement அண்மையில், பெருமைக்குரிய SUPERBRANDS அந்தஸ்த்தை பெற்றுக் கொண்டு, தரம், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன் சிறப்பு ஆகியவற்றுக்கான தனது சிறந்த அர்ப்பணிப்பிற்கு கௌரவிப்பை பெற்றுக் கொண்டது. TOKYO SUPERMIX ரெடி-மிக்ஸ்ட் கொங்கிறீட் வலையமைப்பு நிறுவனத்தின் செயற்பாடுகளின் முக்கியன செயலாற்றும் கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன், புத்தாக்கமான உலர் மோடார் தயாரிப்புகளான TOKYO SUPERBOND, TOKYO SUPERSEAL மற்றும் TOKYO SUPERCAST போன்றனவும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இவை தத்தமது பிரிவுகளில் சந்தை முன்னோடிகளாக அமைந்துள்ளன.

இலங்கையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் செயற்திட்டங்களுக்கு உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்கி, தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளின் முன்னணி பங்காளர் எனும் தனது நிலையை உறுதியாக பேணியுள்ளது. தரத்தை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதில் நிறுவனம் தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், தொழிற்துறையின் புத்தாக்கமான புரட்சியாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

image
டோக்கியோ விற்பனையாளர் மாநாடு 2026 இல் உயர் விருது வெற்றவர்கள் – தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் குழும சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் தசந்த உடவத்த ஆகியோர் காணப்படுகின்றனர்.