Social share
More News
கம்பஹாவில் புதிய காட்சியறையைத் திறந்து சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தும் சிக்னேச்சர்
இலங்கையில் புகழ் பெற்றுத் திகழும் ஆண்கள் ஆடை வர்த்தக நாமமான சிக்னேச்சர் (Signature), கம்பஹாவில் தனது புதிய காட்சியறையைத் திறந்து வைத்து, சில்லறை விற்பனை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தும் முக்கியமான நடவடிக்கையை பதிவு செய்துள்ளது. கம்பஹா, கொழும்பு வீதி, இலக்கம் 128/1 இல் அமைந்துள்ள இந்த புதிய கிளையானது, சிக்னேச்சரின் 11ஆவது காட்சியறையாக அமைந்துள்ளதுடன், இலங்கை முழுவதும் அதன் சில்லறை விற்பனைப் பரவலை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாகவும் திகழ்கிறது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவில் பிரதம […]
Read more
கல்வித்துறை எதிர்கொள்ளும் மாற்றங்களை நிர்வகிப்பதற்கு புதிய நோக்கை வழங்கிய 11 ஆவது TISSL மாநாடு
இலங்கை சர்வதேசப் பாடசாலைகள் சங்கத்தினால் (TISSL) ஏற்பாடு செய்யப்பட்ட 11வது வருடாந்த மாநாடு, “பாடசாலைகளில் மாற்றத்தை நிர்வகித்தல்” என்ற கருப்பொருளின் கீழ் அண்மையில், வாத்துவவில் அமைந்துள்ள புளூ வோட்டர்ஸ் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. கல்வித் துறையில் பல தலைவர்கள், அதிபர்கள் மற்றும் நிபுணத்துவப் பேச்சாளர்களை ஒன்றிணைத்த இந்த மாநாடு, நவீன கல்வி எதிர்கொள்ளும் மாற்றங்களையும் சவால்களையும் வெற்றிகரமாக நிர்வகிப்பது குறித்த ஆழமான விவாதத்திற்கு வழிவகுத்தது. மாநாட்டின் தொடக்க அமர்வு பாரம்பரிய மங்கள விளக்கேற்றுதலுடன் தொடங்கியது. மேலும், TISSL […]
Read more
“ஒவ்வொரு வகுப்பறையிலும் படைப்பாற்றலைப் புகுத்துதல்: ஆங்கில மொழி கற்பித்தலின் எதிர்காலம் பற்றிய ஒரு பிராந்திய உரையாடல்
பிரிட்டிஷ்கவுன்சிலின் இலவச இணைய வழிமாநாடானது, வேகமாக மாறிவரும் உலகிற்குத் தேவையான திறன்களுடன் கற்றலாளர்களைத் தயார்படுத்துவதில் படைப்பாற்றல், உள்ளடக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கை ஆராய்வதற்காக தெற்காசியா முழுவதிலுமிருந்து முன்னணி கல்வியாளர்களை ஒன்றிணைக்கிறது. பிரிட்டிஷ் கவுன்சில் ஆனது South Asia Teaching English Online Conference 2026 என்ற மூன்று நாள் இலவச இணையவழி மாநாட்டை அறிவித்துள்ளது. இம்மாநாடு, தெற்காசியா முழுவதிலுமிருந்து ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களை ஒன்றிணைத்து, இன்றைய கல்வித்துறையின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றை ஆராய […]
Read more
Pepsi Street Kala 2.0, இலங்கையின் கலை, இசை மற்றும் சுவைகளை ஒருங்கிணைத்த, வண்ணமயமான கலாச்சார அனுபவத்தை வழங்கியது
இலங்கையின் கலை, இசை மற்றும் சுவைகளை ஒரே மேடையில் கொண்டாடும் வகையில், Pepsi Street Kala தனது இரண்டாவது பதிப்பை 2026 ஜூலை 4 ஆம் திகதி கொழும்பு Excel World வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தியது. நாள் முழுவதும் இடம்பெற்ற இந் நிகழ்வு, இலங்கைக் கலாச்சாரத்தின் பல்வகை சிறப்புகளை உயிர்ப்புடன் கொண்டாடும் வண்ணமயமான அனுபவமாக அமைந்தது. Pepsi®ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பொது கலை முன்முயற்சி, ஆயிரக்கணக்கான மக்களை கலை, கலாச்சாரம் மற்றும் சமூக ஒற்றுமையின் கீழ் […]
Read more
இலங்கையில் மருந்து உற்பத்தியை வலுப்படுத்துவதற்குகைகோர்க்கும் Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார்
புத்தாக்கங்களை உருவாக்கும் உலகளாவிய நிறுவனமான Zydus Lifesciences மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘Zydus Sunshine Lifesciences Pvt Ltd என்ற புதிய கூட்டு நிறுவனத்தை இன்று ஆரம்பித்துள்ளன. இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்க இவர்கள் 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் (சுமார் 2 கோடி டொலர்) அதிகமாக முதலீடு செய்யவுள்ளனர். இது உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதிக்கான தேவையை குறைக்கும். ஹொரணையில் உள்ள முதலீட்டுச் சபை (BOI) வலயத்தில், சுமார் நான்கு […]
Read more
உயர்தர மின்சார வாகன இயக்கத்தில் புதிய சகாப்தம்:இலங்கையில் XPENG G6 அறிமுகம்
எவல்யூஷன் ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை பிரீமியம் ஸ்மார்ட் மின்சார SUV மாடலை கொழும்பில் அறிமுகப்படுத்தியது இலங்கையில் XPENG மின்சார வாகனங்களுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக செயல்படும் எவல்யூஷன் ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அமைக்கும் வகையில், புதிய தலைமுறை XPENG G6 மாடலை கொழும்பு 05 இல் அமைந்துள்ள தனது பல்வகை வர்த்தகநாம காட்சியறையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. பிரீமியம் ஸ்மார்ட் மின்சார SUV […]
Read more
இலங்கையில் வீசா அறிமுகப்படுத்தும் ‘Click to Pay’ தீர்வு, இணையத்தில் நுகர்வோர் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான பாதுகாப்பான, விரைவான வழிமுறை
நுகர்வோர் மத்தியில் பாதுகாப்பான, தங்குதடையற்ற, மற்றும் தொடுகையற்ற டிஜிட்டல் வணிக அனுபவத்தை மேம்படுத்துவதில் முக்கியமான படியொன்றைக் குறிக்கும் வகையில், இலங்கையில் ‘Click to Pay’ தீர்வை இன்று அறிமுகம் செய்து வைப்பதாக வீசா அறிவித்துள்ளது. பின்வரும் வசதிகளுக்கு இடமளிப்பதன் மூலமாக இணைய வழியில் பணக் கொடுப்பனவு வழிமுறைகளை ‘Click to Pay’ தீர்வு பாரிய அளவில் மேம்படுத்துகின்றது: டிஜிட்டல் வர்த்தகம் இலங்கையில் தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், நுகர்வோரும், வர்த்தகர்களும் விரைவான, எளிதான, மற்றும் பாதுகாப்பான […]
Read more
Prime Group மற்றும் கூட்டாண்மை: இரண்டு முன்னோடிகள் ஒரே தொலைநோக்கு
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியாகத் திகழும் Prime Group, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இசை நட்சத்திரங்களான பாதியா மற்றும் சந்துஷ் (BNS) உடன் மூலோபாய பங்காண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை, உலகளாவிய அங்கீகாரத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. இந்தக் கூட்டாண்மை, தத்தமது துறைகளுக்குள் சிறப்பாகத் திகழ்வதை மறுவரையறை செய்துள்ள இரண்டு முன்னணி வர்த்தகநாமங்களை ஒன்றிணைக்கிறது. BNS, இலங்கை இசையை சர்வதேச மேடைகளுக்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்துள்ள வேளையில், […]
Read more
Cinnamon Grand கொழும்பில் Lassana.com தனது புதிய விற்பனை நிலையத்தை திறந்துள்ளது
இலங்கையின் முன்னணி மலர் மற்றும் அன்பளிப்பு வர்த்தக நாமமான Lassana.com, தனது புதிய மலர் விற்பனைநிலையத்தை அண்மையில் Cinnamon Grand கொழும்பில் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இந்த நகர்வானதுகொழும்பின் விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறைத் துறையில் வர்த்தக நாமத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மலர் அன்பளிப்புகள் மற்றும் மலர் சார்ந்த திருமண அனுபவங்களை வசதியாகப்பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. கொமர்ஷல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க பிரதம விருந்தினராகவும், Lassana.com வர்த்தக நாமத்தூதுவரும், முன்னாள் இலங்கையின் உலக அழகியுமான அனுதி குணசேகர கௌரவ விருந்தினராகவும்கலந்துகொண்டு இந்தப் புதிய விற்பனை நிலையத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர். Lassana நிறுவனக்குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி லசந்த மாலவிகே, மலர் பிரிவின்தலைவர் Piet De Jong , Cinnamon Grand கொழும்பின் பொது முகாமையாளர் நஸூமி அஷார், Lassana Flora Weddings இன் ஆடம்பரதிருமணங்களின் முகாமையாளர் யூசுப் சிராஜுதீன் ஆகியோருடன் பெருமளவிலான விருந்தினர்களும்நலன்விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். புதிய Lassana.com விற்பனை நிலையமானது, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மலர்கள், மலர் அலங்காரங்கள்மற்றும் அன்பளிப்புத் தீர்வுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டல் விருந்தினர்கள், நிறுவனவாடிக்கையாளர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நகரத்தின் மையப்பகுதியில் உயர்தர மலர்அன்பளிப்புகளை வசதியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. கொழும்பின் மிகச் சிறந்தவிருந்தோம்பல் இடங்களுள் ஒன்றான இந்த ஹோட்டலின் வரவேற்பறையில் அமைந்துள்ள புதிய மலர் விற்பனைநிலையமானது, நேர்த்தி, வசதி மற்றும் Lassana.com வர்த்தக நாமத்துடன் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையானதரம் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இந்த விற்பனைய நிலையமானது நிறுவனத்தின் மலர் கலைத்திறன் மற்றும்திருமண நிகழ்வு நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் ஓர் இடமாகவும் செயல்படும். இந்த விரிவாக்கம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நிறுவனத் தலைவரும் முகாமைத்துவப்பணிப்பாளருமான வைத்திய கலாநிதி லசந்த மாலவிகே, “இலங்கையின் மிகப் பரந்த மலர் மற்றும் அன்பளிப்புச்சூழலமைப்பை உருவாக்கும் Lassana.com இன் பயணத்தில், எமது Cinnamon Grand விற்பனை நிலையத்தின் அமைவானது ஒருமுக்கியமான மைல்கல்லாகும். இந்தக் கூட்டாண்மையானது, தடையற்ற மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர்அனுபவத்தை வழங்குவதற்காக நாட்டின் முன்னணி மலர் வர்த்தக நாமத்தையும் இலங்கையின் மிகவும் மதிக்கப்படும்விருந்தோம்பல் வர்த்தக நாமங்களில் ஒன்றையும் ஒன்றிணைக்கிறது. நேரடியாக வரும் வாடிக்கையாளர்களுக்குச்சேவையாற்றுவதற்கு அப்பால், இந்த விற்பனை நிலையமானது பல வழிகளிலான அன்பளிப்பு மையமாகவும்செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் Lassana.com ஊடாக மேற்கொள்ளும் கொள்வனவுகளை Cinnamon Grand இல் வசதியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த விற்பனை நிலையத்தின் மலர் சேகரிப்புகளுடன், Cinnamon Grand இன் புகழ்பெற்ற இனிப்பு வகைகளும் (confectionery), மின்சார வாகனங்கள் ஊடாக கொழும்பு 1 முதல் 4 வரையான பகுதிகளில் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. உயர்தர மலர்கள், சிறந்த இனிப்பு வகைகள், வசதிமற்றும் நிலைபெறுதன்மை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்ததருணங்களைக் கொண்டாடுவதை நாங்கள் முன்பை விட எளிதாக்குகிறோம்” என்று தெரிவித்தார். அன்பளிப்பு வழங்குவது குறித்த தனது கருத்துகளை வெளியிட்ட Lassana.com வர்த்தக நாமத் தூதுவர் அனுதி குணசேகர, “மலர்கள் அவற்றின் அழகு அல்லது நறுமணத்திற்காக மட்டும் போற்றப்பட வேண்டியவை அல்ல என்று நான் நம்புகிறேன். அவை நமக்கொரு பாடத்தையும் கற்றுக்கொடுக்கின்றன. மலர்கள் பூக்கின்றன, வாடுகின்றன, மீண்டும் பூக்கின்றன. மகிழ்ச்சியும் கிட்டத்தட்ட அப்படித்தான். அது சிறிது காலம் நம்மை விட்டு விலகியிருந்தாலும், மீண்டும் திரும்பும்இயல்புடையது. மலர்கள் நமக்கு அதனை நினைவூட்டுகின்றன என்று நான் நினைக்கிறேன்” என்றார். Cinnamon Grand கொழும்பின் பொது முகாமையாளர் நஸூமி அஷார் கருத்துத் தெரிவிக்கையில், ” Cinnamon Grand கொழும்பில், எங்கள் விருந்தினர்களுக்கு நாங்கள் வழங்கும் அனுபவங்களை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள்தொடர்ந்து தேடி வருகிறோம். Lassana.com உடனான எமது கூட்டாண்மையானது, சிறந்த சேவை, ஆக்கத்திறன் மற்றும்வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பைப் பகிர்ந்துகொள்ளும் இரண்டு நம்பகமான இலங்கை வர்த்தகநாமங்களை ஒன்றிணைக்கிறது. இந்த விற்பனை நிலையத்தின் இணைப்பானது எங்கள் விருந்தினர்களுக்கு வசதியைச்சேர்ப்பது மட்டுமன்றி, Cinnamon Grand கொழும்புக்கு உரித்தான வாழ்க்கை முறை மற்றும் கொண்டாட்டஅனுபவங்களையும் வளப்படுத்துகிறது. Lassana.com ஐ எமது ஹோட்டலுக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், எங்கள் விருந்தினர்களுக்கு பல மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் வெற்றிகரமான கூட்டாண்மையைஎதிர்பார்க்கிறோம்” என்றார். Lassana.com தனது சில்லறை வர்த்தகத் தொடர்பாடல் மையங்களின் வலையமைப்பை எதிர்காலத்தில் மேலும்விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அன்பளிப்புத் தீர்வுகளை மேம்படுத்தவும், புதியமூலோபாய விருந்தோம்பல் கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்தவும், அத்துடன் ஆக்கபூர்வமான மலர் மற்றும்அன்பளிப்புச் சேகரிப்புகளின் அறிமுகத்துடன் தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Read more
அடிமட்டத்திலிருந்தே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்: இலங்கை முழுவதுமுள்ள தொழில்முனைவோரைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தும் லங்கா லயன்ஸ் அறக்கட்டளை சிறு கடன் திட்டம்
இலங்கையிலுள்ள லயன்ஸ் கழகத்தின் கீழ் மனிதநேய மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அறப்பணிப் பிரிவான, லங்கா லயன்ஸ் அறக்கட்டளை (Lanka Lions Foundation – LLF), பாரம்பரிய வங்கி வசதிகளை அணுக முடியாத, பொருளாதார ரீதியாக சிறந்த வகையில் செயற்பட்டு வருகின்ற, குறைந்த வருமானம் உடைய நபர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட தனது நீண்டகால சிறு கடன் (Micro loan) திட்டத்தின் மூலம் அடிமட்டத்திலுள்ள தொழில்முனைவோர் மத்தியில் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 2026 ஏப்ரல் […]
Read more
XPENG மற்றும் AVATR ஊடாக நிறைவேற்று அதிகாரிகளுக்கான பிரீமியம் போக்குவரத்து திறனை வெளிப்படுத்த 45 Under 45 CEO விருதுகளுடன் இணைந்த Evolution Auto
இலங்கையில் XPENG மற்றும் AVATR வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Evolution Auto நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகன போக்குவரத்துத் தீர்வுகள் மூலம் தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்தை ஆதரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், புகழ்பெற்ற ’45 Under 45 CEO Awards 2026′ நிகழ்வுடன் கைகோர்த்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா Global CEO Forum (Pvt) Ltd. நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொலைநோக்குப் பார்வை, […]
Read more
Eswaran Brothers மாற்றத்தைக் கொண்டுவரும் தலைமைத்துவப் பயணத்தின் மூலம் பெண்களை வலுப்படுத்துகிறது
பெண்களின் அதிகாரமளிப்பை மேம்படுத்துவதற்கும் வலுவான தலைமைத்துவ வரிசையை உருவாக்குவதற்குமான தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தியாளரான Eswaran Brothers Exports (EB) தனது முக்கிய மகளிர் தலைமைத்துவ முன்னெடுப்பான She Transforms என்ற, தனிப்பயனாக்கப்பட்ட ஆறு மாத தலைமைத்துவ மேம்பாட்டுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. விருது பெற்ற தலைமைத்துவ நிபுணர் செனலா ஜெயசூரியாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டு Value for Women அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்தத் திட்டம் தலைமைத்துவ திறன் மேம்பாடு, உள்ளடக்கம் மற்றும் […]
Read more
