Coca-Cola Foundation (TCCF) அறக்கட்டளையின் நிதியுதவியுடன், Sevalanka அறக்கட்டளை கம்பஹா மாவட்டம், பியகமவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. டிட்வா சூறாவளியின் பின்னர் பாதுகாப்பான குடிநீர் வசதி, சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொது வசதிகளை மீட்டெடுப்பதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

பியகம பிரதேச செயலகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம், மாசடைந்த கிணறுகளையும் குழாய் கிணறுகளையும் சுத்தப்படுத்தி புனரமைப்பதில் கவனம் செலுத்துகிறது. இது வெள்ளத்திற்குப் பினனர்; ஏற்பட்டுள்ள பாதுகாப்பான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும். மேலும், பாடசாலைகள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்கள் போன்ற அவசிய பொதுமக்கள் இடங்களை சுத்தப்படுத்தி மீண்டும் திறப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் அதிகாரிகளும் மக்களும் தங்கள் அன்றாட செயல்பாடுகளை பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிக்க முடியும். ஆரம்பகட்ட நிவாரண நடவடிக்கையாக, Sevalanka அறக்கட்டளையும், Coca-Cola அறக்கட்டளையும் பிரதேச செயலகத்திற்கு நீர்ப்பம்பிகளை வழங்கியுள்ளன. இவை உடனடி நீர் வெளியேற்றம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த திட்டத்தின் இரண்டாவது முக்கிய அம்சமாக, பிரதேச சுகாதார வைத்திய அதிககாரியின் வழிகாட்டுதலின் அடிப்படையில், சுகாதார வைத்திய அதிககாரி அலுவலகத்தால் நடத்தும் சுகாதார நிலையங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவசரகால மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீட்டெடுப்பதற்காக சுகாதாரமயமாக்கல், குப்பைகளை அகற்றுதல், பாதுகாப்பு அபாயங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், மருத்துவர்கள் மற்றும் மூத்த தாதியர்கள் அடங்கிய குழுவினரால் சுகாதார வைத்திய அதிககாரி அலுவலகங்கள் வழியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, முன்னுரிமை பெறும் மக்களுக்கு சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தொடர்பான நிவாரண பொருட்கள் வழங்கப்படும்.
குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு தேவை அடிப்படையிலான நிவாரண தொகுப்புகள் வழங்கப்படும். இதில் சுகாதாரப் பொருட்கள், உலர் உணவுப் பொருட்கள், குழந்தை பராமரிப்பு பொருட்கள் மற்றும் துவைகள், படுக்கை மெத்தைகள், போர்வைகள் போன்ற அடிப்படை வீட்டுத் தேவைப் பொருட்கள் அடங்கும். மேலும், தகுதியான நபர்களுக்கு புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட சிறப்பு ஊட்டச்சத்து தொகுப்புகளும் வழங்கப்படும். பயனாளிகள் பதிவு கிராம சேவகர் அலுவலகங்கள் மூலம் நடைபெறும்.
இது தொடர்பில் Coca-Cola அறக்கட்டளையின் தலைவர் Carlos Pagoaga கருத்து தெரிவிக்கையில், “வெள்ளத்திற்குப் பின்னர் பாதுகாப்பான குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசிய வசதிகள் மிக முக்கியமானவை. Sevalanka அறக்கட்டளையுடனான இந்த பணியின் மூலமும், உள்ளூர் அதிகாரிகளுடனான நெருக்கமான ஒருங்கிணைப்பின் மூலமும், பியகமவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்கவும், அவர்களின் அன்றாட வாழ்க்கையை சீரமைக்கவும் உதவுவதே எங்களின் நோக்கமாகும்.” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், Sevalanka அறக்கட்டளையின் முகாமைத்துவ பணிப்பாளர் கௌசல்யா நவரட்ன கூறுகையில், “வெள்ளம் சமூகங்களை பல்வேறு வழிகளில் ஆழமாக பாதிக்கிறது. குடிநீர் பாதுகாப்பு, சுகாதாரம், பொது சேவைகள் என அனைத்து தளங்களிலும். Sevalanka அறக்கட்டளையின் ஆதரவுடன், நாங்கள் களத்தில் விரைவாக செயல்பட்டு, அவசர தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, மீட்பு நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ள சமூகங்களுக்கு உறுதுணையாக இருக்க முடிகிறது.” என தெரிவித்தார்.
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதில் Coca-Cola அறக்கட்டளை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது. நம்பகமான உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதும், அவசரகால நிலைமைகளுக்குப் பின் சமூகங்களின் மீள்திறனை வலுப்படுத்துவதும் இதன் குறிக்கோளாகும்.
