பயனர் மையமான கட்டமைப்புடன் இலங்கை மற்றும் வங்கதேசத்தை நோக்கி நகரும் ZKTOR
தெற்காசியாவின் சமூக ஊடக பயணம் இதுவரை பெரும்பாலும் பயனர் நடத்தை கண்காணிப்பை அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டு தளங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கை வாழ் இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இந்த தளங்கள், இணைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் எளிதாக்கினாலும், அதற்குப் பின்னால் இயங்கும் தரவு சேகரிப்பு முறை பெரும்பாலும் வெளிப்படையானதாக இல்லை.

இச் சூழலில், இந்தியாவில் உருவாகி நேபாளத்தில் பொதுப் பீட்டா சோதனையை கடந்து வரும் ZKTOR, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் ஒரே நேரத்தில் பீட்டா கட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகிறது. இது ஒரு புதிய சமூக ஊடக செயலி (App) அறிமுகமாக மட்டுமல்ல, தென்னாசியாவில் “தரவு யாருடையது” என்ற அடிப்படை கேள்வியை மீண்டும் முன்வைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
ZKTOR-இன் அடிப்படை வடிவமைப்பு, பயனர் தரவை வணிகமாக்கும் பழைய மாதிரிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. zero-knowledge server architecture மூலம், பயனர் என்ன பார்க்கிறார், என்ன பகிர்கிறார் என்பதைத் தளம் தானாகவே அறிய முடியாத வகையில் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல அடுக்குகளான குறியாக்க அமைப்பு மற்றும் உள்ளடக்கப் பாதுகாப்பு முறைகள், தரவை வெளிப்புற அணுகல்களிலிருந்து கட்டமைப்பிலேயே பாதுகாக்கின்றன.

இந்த அணுகுமுறை, குறிப்பாக பெண்களின் ஒன்லைன் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் மரியாதை தொடர்பான பிரச்சினைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. தெற்காசிய சமூகங்களில், பெண்கள் எதிர்கொள்ளும் ஒன்லைன் சவால்களை மற்றும் தரவு தவறான பயன்பாடு குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வந்தாலும், தொழில்நுட்ப கட்டமைப்பிலேயே பாதுகாப்பை உருவாக்கும் முயற்சிகள் குறைவாகவே இருந்தன.
ZKTOR இனை வடிவமைத்த சுனில் குமார் சிங், பின்லாந்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து, ஸ்காண்டினேவிய சமூகங்களில் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பொறுப்புணர்வு தொழில்நுட்பத்தில் எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதை நேரடியாக அனுபவித்தவர் ஆவார். அந்த அனுபவத்தையும், இந்திய சமூகத்தின் பன்மொழி மற்றும் பண்பாட்டு யதார்த்தத்தையும் இணைத்ததே இந்த தளத்தின் அடிப்படை தத்துவமாகும்.
இந்த முயற்சி எந்த வெளிநாட்டு venture capital முதலீட்டையோ அல்லது அரசுத் துணையையும் சாராமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தளத்தின் நீண்டகால பாவனை மற்றும் பெறுமதிகள் வெளிப்புற அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கம் தெளிவாகின்றது.
இலங்கை மற்றும் வங்கதேசத்தில் ZKTOR-இன் பீட்டா அறிமுகம், சமூக ஊடகங்களை ஒரு சேவையாக மட்டுமல்லாது, ஒரு பொறுப்பான பொதுத் தளமாக மீள்பார்க்கும் தேவையை வலியுறுத்துகிறது.
