சமூக ஊடகம், உள்நாட்டு செய்திகள், வர்த்தகம், AI பாதுகாப்பு மற்றும் விளம்பர துறைகளை ஒன்றிணைக்கும் ZKTOR நிறுவனத்தின் பரந்த டிஜிட்டல் ecosystem, இந்தியாவின் பிராந்திய தளமாக செயற்படும் நோக்கத்தின் முக்கிய முன்னோடி மையமாக இலங்கையை மாற்றி வருகிறது.

ZKTOR மட்டுமன்றி, அதனைச் சுற்றி உருவாக்கப்பட்டு வரும் பரந்த டிஜிட்டல் அமைப்பிற்கும் (ecosystem) இலங்கை ஒரு முக்கிய முன்னோடி சந்தையாக மாறி வருகிறது. Softa Technologies உருவாக்கிய ZKTOR தளம், இந்தியா, நேபாள், இலங்கை மற்றும் பங்காளதேசம் ஆகிய நாடுகளில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட Beta பயனர்களை பெற்றுள்ளது. குறிப்பாக Gen Z தலைமுறையினரும் இளம் பெண்களும் அதிகளவில் இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆரம்பகட்ட வரவேற்பு, தெற்காசிய பயனர்கள் ஒரு புதிய தளத்தை பயன்படுத்துவது மட்டுமன்றி, நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு தேவைகளை மையமாகக் கொண்ட இந்திய டிஜிட்டல் செயலியை ஏற்றுக்கொண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.
இந்த ecosystem இன் மையத்தில் ZKTOR தளம் உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), deepfake, இணைய பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் பாதுகாப்பற்ற டிஜிட்டல் சூழல்கள் அதிகரித்து வரும் காலகட்டத்திற்காக உருவாக்கப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைக்கும் இந்திய சமூக ஊடக தளமாக இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பில் privacy மற்றும் data safety ஆகியவை ஆரம்ப வடிவமைப்பிலேயே இணைக்கப்பட்டுள்ளன. Zero Knowledge Server Architecture, No URL Media Architecture, behavior tracking இல்லாமை மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட default encryption போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்பு (design) தேர்வுகள், “பாதுகாப்பு, மரியாதை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றோடு தான் பயனர்களின் பங்கேற்பு ஆரம்பிக்க வேண்டும்” என்ற தளத்தின் அடிப்படை அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன.
ZKTOR நிறுவனத்தின் பரந்த ecosystem, இந்த தளத்திற்கு பொருளாதார மற்றும் பிராந்திய ஆழத்தையும் வழங்குகிறது. Subkuz தளம் உள்நாட்டு மட்ட செய்திச் சேவை மற்றும் வெளிநாட்டு சமூகங்களுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இது உள்நாட்டு கதைகள் மற்றும் பிராந்திய குரல்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது. Ezowm, உள்நாட்டு மட்ட வர்த்தகம் மீது கவனம் செலுத்தி, உள்நாட்டு தேவை மற்றும் வழங்கலை நெருக்கமாக இணைக்கிறது. Hola AI, முழு தளத்திற்குமான நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. அதேவேளை, உள்நாட்டு மட்ட விளம்பர வலையமைப்பாக முன்மொழியப்பட்டுள்ள ZHAN, உள்நாட்டு வணிகங்கள், creators, சேவை வழங்குனர்கள் மற்றும் அருகிலுள்ள பயனர்கள் ஆகியவர்களை வெளிப்படையான monetisation அமைப்பின் மூலம் இணைக்கும் தளமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு டிஜிட்டல் வளர்ச்சி என்பது வெறும் பொழுதுபோக்கை மட்டும் குறிக்கவில்லை. உள்நாட்டு வணிகங்களுக்கு நம்பகமான visibility தேவைப்படுகிறதுடன், creators களுக்கு பாதுகாப்பான தளங்கள் தேவைப்படுகின்றன. அத்துடன் பெண்கள் வழிநடத்தும் மற்றும் வீட்டை அடிப்படையாகக் கொண்ட வணிகங்களுக்கு கட்டுப்பாடான பங்கேற்பு அவசியமாகிறது. குடும்பங்களுக்கு நம்பிக்கைக்குரிய மற்றும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய டிஜிட்டல் சூழல் தேவைப்படுகிறது. சமூக ஊடகம், உள்நாட்டு செய்திகள், வர்த்தகம், AI பாதுகாப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றை இணைக்கும் இந்த அமைப்பு, நம்பிக்கை, மொழி, உறவுகள் மற்றும் சமூக மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார சூழலில் ஒவ்வொரு தேவைக்கும் தனித்த செயலியாக இருப்பதை விடவும் அதிக செயல்திறனான ஒரு செயலியாக செயற்படலாம்.
இந்த ecosystem த்தின் பின் உள்ள சிந்தனை, Softa நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுனில் குமார் சிங் அவர்களிடமிருந்து உருவாகிறது. இந்தியாவின் கிராமப்புற பின்னணியையும், பின்லாந்தின் ஒழுங்குமுறை மற்றும் உரிமை சார்ந்த வடிவமைப்பு கலாசாரத்துடனான இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தையும் இணைக்கும் திறன் அவருக்குள்ளது. பயனர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள் பல ஆண்டுகளாக இருந்தபோதிலும், அவை default அம்சங்களாக அரிதாகவே பயன்படுத்தப்பட்டன என்பதே சிங் அவர்களின் கருத்தாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு, பயனர் பாதுகாப்பு என்பது பின்னர் வழங்கப்படும் ஒரு வாக்குறுதியாக அல்லாது, தளத்தின் அடிப்படை வடிவமைப்பின் ஒரு பகுதியாகவே ZKTOR உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ecosystem இலங்கைக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளையும் எடுத்து வந்துள்ளது. ZKTOR தெற்காசிய அளவில் மேலும் விரிவடைந்தால், செயல்பாடுகள், மார்க்கெட்டிங், creator activity, பிரச்சார ஆதரவு மற்றும் platform stack உடன் தொடர்புடைய டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளில் இலங்கை இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகக்கூடும். பூடான், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான Beta expansion திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ZKTOR தற்போது ஆரம்பகட்ட வளர்ச்சியிலிருந்து பிராந்திய அங்கீகாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்தியாவுக்காக இது ஒரு முக்கியமான மூலோபாய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டு வளர்ச்சி நோக்கங்களை தாண்டி, தெற்காசியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வடிவமைக்கும் திறன் இந்திய தொழில்நுட்பத்திற்கு இருப்பதை ZKTOR வெளிப்படுத்துகிறது. அதேவேளை, தனி உரிமை, உள்ளூர் மட்ட வர்த்தகம் மற்றும் பிராந்திய தேவைகளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையை மையமாக கொண்ட டிஜிட்டல் ecosystem இல் ஆரம்ப கட்டத்திலேயே பங்கேற்கும் வாய்ப்பை இது இலங்கைக்கு வழங்குகிறது.
