David Pieris குழுமத்தின் ஒரு அங்கமான PearlBay, உலகச் சிறுவர் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சிறுவர்களுக்காகத் தனது உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு பூங்காவில் விசேட போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது. சிறுவர்களின் மகிழ்ச்சி, சிரிப்பு, கற்பனைத்திறன் மற்றும் சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்கான சூழலை இது அமைத்துக்கொடுத்துள்ளது.






உலகச் சிறுவர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இலங்கையின் முன்னணி நீர் சார்ந்த பொழுதுபோக்கு பூங்காவான PearlBay, 75 அதிர்ஷ்டசாலி சிறுவர்களுக்குத் தங்களது குடும்பத்துடன் இணைந்து இலவசமாகச் சென்று மகிழ்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இப்போட்டியில் பங்கேற்பது மிகவும் எளிதானதாகும். சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்த சிறுவர் பத்திரிகைகளில் வெளியாகும் PearlBay போட்டிப் படிவத்திலுள்ள மூன்று குறுகிய வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட கூப்பன்களை மின்னஞ்சல், WhatsApp அல்லது தபால் மூலம் வழிகாட்டல்களுக்கு அமைய அனுப்பி வைக்க முடியும். இக்கூப்பன் போட்டியின் மூலம் தெரிவு செய்யப்படும் 75 வெற்றியாளர்களுக்கு PearlBay நுழைவுச் சீட்டுகள் இலவசமாக வழங்கப்படுவதுடன், அவர்களின் பெற்றோருக்கு நுழைவுச் சீட்டுகளுக்கான பிரத்யேகக் கழிவுகளும் வழங்கப்படும்.
David Pieris Leisure (தனியார்) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிரிப்சன் ஹபுகொடுவ கருத்துத் தெரிவிக்கையில், “World Waterpark அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட PearBay, சர்வதேச தரநிலைகளுக்கமைய சிறுவர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3,500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை தாராளமாக உபசரிக்கக்கூடிய உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு வசதிகளைக் கொண்டுள்ளதால், குடும்பங்கள் நாள் முழுவதும் உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களைப் பெற்று மகிழ்வதற்கேற்ற ஒரு சிறந்த இடமாக இது திகழ்கிறது” எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், “PearBay தனது SplashBay பிரிவிலுள்ள அனைத்து நீச்சல் தடாகங்கள் மற்றும் நீர்ச்சறுக்குகளில் pH மற்றும் குளோரின் அளவுகளை தினமும் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது உட்படக் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரங்களைப் பேணி வருகிறது. TÜV NORD சர்வதேச சான்றிதழ் தரநிலைகளுக்கு அமைய அமைக்கப்பட்டுள்ள இப்பூங்கா, வருகை தரும் ஒவ்வொரு விருந்தினருக்கும் பாதுகாப்பான, மறக்க முடியாத அனுபவத்தை உறுதிப்படுத்த கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகிறது” எனத் தெரிவித்தார்.
SplashBay மற்றும் SpeedBay ஆகியவற்றின் விறுவிறுப்பு முதல் TargetBay மற்றும் ArrowBay ஆகியவற்றின் சவால்கள், ChillBay மற்றும் WellnessBay ஆகியவற்றின் அமைதியான சூழல், அத்துடன் YumBay வழங்கும் சுவையான உணவு அனுபவங்கள் என குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்குமான பல்வேறு அனுபவங்களை PearlBay ஒன்றிணைக்கிறது.
வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, டிஜிட்டல் திரைகளில் இருந்து விலகி, அன்றாடப் பணிகளுக்குச் சற்று இடைவெளி கொடுத்து குடும்பத்தினருடன் அர்த்தமுள்ள நேரத்தைச் செலவிடுவதற்கான அழைப்பாகவே PearlBay நிறுவனத்தின் இந்த உலகச் சிறுவர் தின முன்னெடுப்பு அமைந்துள்ளது.
உலகச் சிறுவர் தினம் என்பது சிறுவர்களுக்கு விளையாடவும், ஆராயவும், நினைவுகளை உருவாக்கவும் வாய்ப்பளிப்பதாகும். தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பை வழங்கி, அந்த உணர்வை உயிர்ப்பிப்பதே PearlBay வங்கியின் முதன்மை நோக்கமாகும்.
