ශ්‍රී ලාංකේය කාන්තාවන්ගේ සහ දැරියන්ගේ සුරක්ෂිතභාවය සහ අභිවෘද්ධිය උදෙසා “ඇයගේ ප්‍රගතිය.අපගේ සමෘද්ධිය” (#HPOP) ජාතික ව්‍යාපාරයක් ආරම්භ කෙරේ. 

ශ්‍රී ලංකාව පුරා වෙසෙන කාන්තාවන් සහ දැරියන්ගේ සුරක්ෂිතභාවය තහවුරු කරමින් ඔවුන්ගේ දියුණුවට මග පෑදීම අරමුණු කරගත් සුවිශේෂී ජාතික ව්‍යාපාරයක් 2026 මාර්තු 08 වන දින නිල වශයෙන් ආරම්භ කරන ලදී. “ශ්‍රී ලාංකේය තරුණ පරපුර කෙරෙහි බලපෑමක් ඇති කිරීමට සහ ඔවුන් දිරිමත් කිරීමට ශ්‍රී ලාංකේය කාන්තාව සතු ශක්තිය” යන තේමාව යටතේ පැවැත්වුණු ජාත්‍යන්තර කාන්තා දින වටමේස සමුළුවට […]

இலங்கையில் திரிபோஷாவை ஊக்குவிக்க அரசாங்கத்துடன் இணைந்து, WFP மற்றும் KOICA 10 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள “விதைத்து வளர்த்தல்’ திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன.

கொழும்பு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (KOICA) 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐந்து ஆண்டு கால ”Sow and Grow” திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது. உயர்தரமான உள்ளூர் சோள உற்பத்தியை அதிகரித்து அதனூடாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு திரிபோஷாவின் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக இலங்கையின் திரிபோஷா திட்டத்தை வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். திரிபோஷா என்பது […]

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கைவகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்த சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026, மார்ச் 9ஆம் திகதி வோட்டர்ஸ் ஏஜ் வளாகத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் தனியார் வைத்தியசாலைத் துறையின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துனர்கள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கையின் சுகாதார சேவைத் துறையில் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு அவை கலந்துரையாடப்பட்டன. தனியார் வைத்தியசாலைகள் மற்றும் […]

உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆர்வத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்ற இரண்டு TikTok குரல்கள்

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கிரிக்கெட் வரலாற்றில் இது பல புதிய விடயங்களை இணைத்துள்ளது. இலங்கையில் வயது வேறுபாடின்றி அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே, இம்முறை நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்ப்பதில் இலங்கை ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். போட்டிகளைப் பார்ப்பதுடன் மட்டுமன்றி, கிரிக்கெட் விளையாட்டின் சுவாரஸ்யமான விடயங்கள் மற்றும் கலந்துரையாடல்களைக் கேட்பதற்கு ரசிகர்கள் பழகிவிட்டனர். ஏனெனில், இது போட்டியைப் […]

ஜனவரியில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு; பிரித்தானிய சந்தை ஸ்திரமாக உள்ளது

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2026 ஜனவரியில் கடந்த ஆண்டை விட 2.66% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2025 ஜனவரியில் 437.07 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வருமானம் 425.44 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் நிலவும் தொடர்ச்சியான நெருக்கடியை பிரதிபலிக்கிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 2.73% வீழ்ச்சியடைந்து 165.11 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (பிரித்தானியா தவிர்ந்த) ஏற்றுமதி 1.93% குறைந்து 126.99 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. பிரித்தானிய […]

டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சன்ஸைன் ஹோல்டிங்ஸ்

பன்முகத்தன்மை கொண்ட நிறுவனங்களின் குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், முழு குழுமத்திற்கும் புதிய மனித வள முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, குழுமத்தின் விரிவான டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிர்வாக முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும். இந்த புதிய அமைப்பு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சிரேஷ்ட தலைமைத்துவ குழுக்கள், திட்டத்திற்கு பொறுப்பான குழுக்கள், சன்ஷைன் உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு குழுக்கள் / […]

டோக்கியோ சீமெந்து தனது 2026 விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு மகுடம் சூட்டியது

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு மகுடம் சூட்டியது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சிறந்த விற்பனையாளர் 2026 எனும் உயர் விருதை யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் பெற்றுக் கொண்டது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை கிளிநொச்சி சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் குருநாகல் நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ் ஆகியன பெற்றுக் கொண்டன. மொத்தமாக 135 சிறந்த விற்பனையாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் […]

Peoples Excellency விருதை வென்றுள்ள Minasro College இன் வருடாந்த விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவு

முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வியில் பூரண ஆளுமை விருத்தியை ஊக்குவிக்கும் சிறந்த பாடசாலையாக Peoples Excellency விருதை வென்றுள்ள Minasro College, 2026 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள சுகததாச மைதானத்தில் தனது நான்காவது வருடாந்த விளையாட்டு விழாவை வெகு விமரிசையாக நடாத்தியது. இந்த தேசிய அளவிலான வெற்றி மற்றும் விளையாட்டு விழா, பாடசாலையின் கல்வித் தொலைநோக்குப் பார்வை மற்றும் மாணவர் மேம்பாட்டிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. Peoples Excellency விருதானது, முன்பள்ளி […]

மாதவிடாய் வறுமையை எதிர்த்துப் போராடஇணைகிறது MAS Femography மற்றும் Selyn Foundation

பெண்களுக்கான ஆடைத் தீர்வுகளில் (FemTech apparel) உலகளாவிய முன்னணியில் திகழும் MAS Femography, இலங்கையின் Selyn அறக்கட்டளையுடன் இணைந்து, மாதவிடாய் வறுமைக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான முயற்சிகளை 2026 ஆம் ஆண்டிற்கான #BleedGood முன்முயற்சியின் ஊடாக முன்னெடுத்துச் செல்கின்றன. இந்த மைல்கல் கூட்டாண்மையானது, பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இலங்கைச் சமூகங்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய மாதவிடாய் கண்ணியத்தை முன்னெடுத்துச் செல்வதற்குமான Selyn மற்றும் MAS Femography ஆகிய இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட இலட்சியத்தை இது பிரதிபலிக்கிறது. இந்தக் […]

இலங்கையில் முதன்முறையாக BYD மற்றும் DENZA வாகனங்களுக்கான பிரத்தியேக காட்சியறை கொழும்பு Altair-இல் திறப்பு

இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, தனது புதிய ‘அல்டேர்’ (Altair) காட்சியறையை கொழும்பில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையின் சூழல்நேய மற்றும் நிலைபேறான போக்குவரத்து நோக்கிய மாற்றத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கொழும்பு அல்டேர் கட்டிடத்தில் அமைந்துள்ள இந்தக் காட்சியறையானது, BYD மற்றும் DENZA ஆகிய […]