Ericsson இலங்கையில் 5G RAN ஐ நிறுவுவதற்காக டயலொக் உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது

  • டயலொக்கின் நாடளாவிய enterprise சேவைகள் மற்றும் 5G சேவைகள் விஸ்தரிப்பு செயற்பாடுகளுக்காக 3.5 GHz அலைக்கற்றை விஸ்தரிப்பு செயற்பாடுகளுக்கு 5G RAN நடைமுறைப்படுத்தலை மேற்கொள்ள Ericsson உதவும்
logo

Ericsson (NASDAQ: ERIC) இலங்கையின் முதல்தர வலையமைப்பான டயலொக் அக்சியாடா பிஎல்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது, அதனூடாக தனது 5G Radio Access Network (RAN) ஐ விஸ்தரிப்பதற்காக Ericsson இன் சேவைகளை டயலொக் பெற்றுக் கொள்ளவுள்ளது. 

பார்சலோனாவில் 2026 மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதை போன்று, Ericsson தனது 5G RAN பிரிவைச் சேர்ந்த Massive MIMO antenna-integrated radio AIR 3219 ஐ 3.5GHz அலைக்கற்றை நிறுவலுக்காகவும் உயர் வினைத்திறன் வாய்ந்த 5G RAN மென்பொருளான Ericsson 5G Advanced solution Real-Time AI Powered Automation ஐ வழங்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் Ericsson இன் Cloud Native Infrastructure Solution (CNIS) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது ஆரம்பத்தில் cloud-native Ericsson Network Manager க்கு ஆதரவாக பயன்படுத்தப்படும். இதன் மூலம் வலையமைப்பில் உள்ள சாதனங்களிலிருந்து தரவுகளை முகாமைத்துவம் செய்யும் மற்றும் பயன்படுத்தும் திறன் மேம்படுத்தப்படும். இது டயலொக் நிறுவனத்தின் வலையமைப்பிற்குள் cloud-native உட்கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதுடன், அந்த நிறுவனத்தின் தற்போதைய Cloudification பயணத்திற்கும் வலுசேர்க்கும். அத்துடன், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எரிக்சன் நிறுவனம் வலையமைப்பு விரிவாக்கச் சேவைகள், ஒருங்கிணைப்பு மற்றும் வலையமைப்பு மேம்படுத்தல் ஆகியவற்றுக்கான ஆதரவையும் வழங்கும்.

இலங்கையில் முதன்முதலாக வணிகரீதியிலான 5G சேவைகளை அறிமுகப்படுத்திய டயலொக், தற்போது 1.5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை இணைத்து நாட்டின் மிகப்பெரிய 5G வலையமைப்பை இயக்கி வருகின்றது.

இலங்கையில் 3.5 GHz அலைக்கற்றையை கொண்ட ஒரேயொரு சேவை வழங்குநர் என்ற ரீதியில், டயலொக் நிறுவனத்தினால் பரந்த அளவிலான சேவையை Ultra-high capacity உடன் வழங்க முடிகிறது. இந்த 3.5 GHz அலைக்கற்றையானது நாடளாவிய ரீதியில் நம்பகமான மற்றும் அன்றாட 5G செயற்திறனை உறுதிப்படுத்துவதுடன், நுகர்வோர் மற்றும் வர்த்தக ரீதியிலான மேம்பட்ட பயன்பாடுகளுக்கு உறுதுணையாக அமையும் சீரான வாடிக்கையாளர் அனுபவத்தையும் வழங்குகின்றது.

இந்த புதிய விரிவாக்கமானது, நாடளாவிய ரீதியில் 5G வலையமைப்பை விரிவுபடுத்தவும், வலையமைப்பின் கொள்ளளவை அதிகரிக்கவும் மற்றும் மேம்பட்ட Enterprise offeringகளை வழங்கவும் டயலொக் கொண்டுள்ள இலக்குகளுக்குப் பெரும் பக்கபலமாக அமையும்.

டயலொக் அக்சியாடா பிஎல்சியின் பணிப்பாளர்/குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “Ericsson உடனான எமது இந்த கைகோர்ப்பானது, இலங்கையின் 5G பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். நாம் இந்த விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்தை விரைவுபடுத்தும் நிலையில், எமது நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துகின்றோம். இது எமது தொழில்முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதுடன், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும், மில்லியன் கணக்கான இலங்கையர்களின் அன்றாட டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்தவும் வழியமைக்கும்.

Ericsson மலேசியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் தலைமை அதிகாரி டேவிட் ஹகெர்புரோ கருத்துத் தெரிவிக்கையில், “Ericsson மற்றும் டயலொக் ஆகியன ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக உறுதியான பங்காண்மையை கட்டியெழுப்பியுள்ளன. இந்த ஒப்பந்தமானது ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள அந்த அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், உயர் செயற்திறன் கொண்ட, வலுசக்தி சிக்கனமான Radio solutions மற்றும் Cloud-native வசதிகளையும் வழங்கி, டயலொக்கின் 5G விரிவாக்கத்திற்கு உதவும். இதன் ஊடாக புதிய வர்த்தக ரீதியிலான பயன்பாடுகளை உருவாக்குவதையும், இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றத்திற்குப் பங்களிப்பு செய்வதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார். 

இந்த விரிவாக்கமானது, புதிய சேவைகள், வர்த்தக ரீதியிலான புத்தாக்கங்கள் மற்றும் அதிவேக இணைய இணைப்பினை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம், இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றத்தை மேலும் விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.