OJ (OMODA மற்றும் JAECOO) வாகனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Hayleys Mobility, நிலைபேற்றியல் சார்ந்த உயர் மட்ட போக்குவரத்தில் புதிய யுகத்திற்கு வழிவகுத்துள்ளது

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சூழல் நேய, திறன்மிக்க போக்குவரத்துத் துறையில் திருப்புமுனையாக அமையும் வண்ணம், கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் 2026 ஜனவரி 27 அன்று இடம்பெற்ற நிகழ்வில் OJ (OMODA மற்றும் JAECOO) மோட்டார் வாகனங்களை Hayleys Fentons Limited நிறுவனத்தின் போக்குவரத்துப் பிரிவான Hayleys Mobility Limited உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது.        

hm oj launch img 2
The newly unveiled JAECOO J8, J7 PHEV, J6 and OMODA E5 models on display.

சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைத்து, நவீன போக்குவரத்து முறைகளுக்கு உயர் மட்ட வாகனங்களை நாடுகின்ற நகர்ப்புற மற்றும் நிறுவன வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிறைவேற்றும் வகையில் OJ வாகனங்களை Hayleys Mobility அறிமுகம் செய்து வைப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட பிரத்தியேக விநியோகத்தராகவும் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.      

23 ஆண்டுகளால் சீனாவில் முதலிடத்தில் திகழும் பிரயாணிகள் போக்குவரத்து வாகன ஏற்றுமதியாளரான Chery குழுமத்தின் கீழ் உயர் மட்ட வர்த்தகநாமங்களாக OMODA மற்றும் JAECOO ஆகியன வெளிவருவதுடன், 2025ம் ஆண்டுக்கான Fortune Global 500 நிறுவனங்கள் பட்டியலில் 233வது ஸ்தானத்தில் இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. உற்பத்தியாளரின் ஆதரவுடனான உத்தரவாதங்கள், நாடளாவிய ரீதியில் விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு, மற்றும் 148 ஆண்டு கால பாரம்பரியச் சிறப்பு மிக்க ஹேலீஸ் குழுமத்தின் நம்பிக்கை ஆகியவற்றின் அனுகூலங்களை இக்கூட்டாண்மையின் மூலமாக இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.          

முதற்கட்டமாக Plug-in Hybrid (PHEV), Hybrid Electric Vehicle (HEV), மற்றும் advanced Internal Combustion Engine (ICE) வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட சிறப்புக்களைக் கொண்ட வாகனங்கள் OJ வரிசையில் அடங்கியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட ஆடம்பரத்துடன், எந்த வகையான நிலத்திலும் பயணிக்கும் ஆற்றல் வாய்ந்த J8, J7 PHEV, J6, J5 வாகனங்கள் JAECOO வரிசையில் அடங்கியுள்ளன. எதிர்காலத்தை கருத்தில் கொண்டுள்ள மற்றும் தொழில்நுட்ப ரீதியான அறிவைக் கொண்ட வாகன ஓட்டுனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட C9 PHEV, அழகிய C5, மற்றும் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் E5 ஆகியன OMODA வரிசையில் அடங்கியுள்ளன.      

Hayleys Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “OJ மூலமாக சூழலைப் பேணும் போக்குவரத்து முறைமைகளுக்கு உதவுகின்ற எமது நீண்ட கால ஆற்றலை வலுப்படுத்தும் அதேசமயம், ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய சந்தைகளில் சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்றுள்ள வாகனங்களை நாம் அறிமுகப்படுத்துகின்றோம்.”    

Hayleys Mobility நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றொஷானி தர்மரத்ன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த வாகன வரிசைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக அதற்கான சரியான அத்திவாரத்தை இடுவதில் நாம் கவனம் செலுத்தினோம். தொழில்நுட்ப அணிகளைப் பயிற்றுவித்தல், விற்பனைக்குப் பின்னரான சேவைக் கட்டமைப்பினை ஏற்படுத்தல் என பல்வேறு முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்கிய பின்னரும் அவர்களுக்கு சிறந்த ஆதரவை வழங்கும் எமது ஆற்றல் மீது நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.”

Hayleys Mobility நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் பெர்னாண்டோ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்ளும் போது வாடிக்கையாளர்கள் அவற்றின் மீது வைக்கும் நம்பிக்கை மிகவும் முக்கியம். வாகன உரிமையாளர்களின் சிரமங்களைப் போக்கி, நம்பிக்கையை வளர்ப்பதற்காகவே உற்பத்தியாளரின் ஆதரவுடனான உத்தரவாதம், அசல் உதிரிப்பாகங்கள் கிடைக்கப்பெறல், மற்றும் 0112 222 222 என்ற எமது துரித சேவை அழைப்பு இலக்கத்தின் மூலமாக வீதியில் பயணிக்கும் சமயங்களில் தேவையான உதவிகள் என அனைத்திற்கு நாம் முன்னுரிமையளித்துள்ளமைக்கு அதுவே காரணம்.”

தான் அறிமுகப்படுத்தியுள்ள பிரயாணிகள் பயன்பாட்டு வாகனங்களுக்குப் புறம்பாக, SRM (Shineray Motors) உடன் இணைந்து வர்த்தகப் பயன்பாட்டு வாகன வரிசையையும் Hayleys Mobility வழங்குகின்றது. மின்சாரத்தில் இயங்கும் இலகுரக வர்த்தகப் பயன்பாட்டு வாகனமான SRM T3 EV> SRM X30L EV பிரயாணிகள் பயன்பாட்டு வேன், மற்றும் SRM X30L EV சரக்கு போக்குவரத்து வேன் ஆகியன அவற்றுள் அடங்கியுள்ளன.     

உலகளாவில் இரு மில்லியனுக்கும் மேற்பட்ட சார்ஜர்களை பயன்பாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ள, உலகளாவிய சார்ஜ் தீர்வுகள் வழங்குனரான StarCharge உடன் இணைந்து இலகுவில் எடுத்துச் சென்று வீடுகளில் சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜர்கள், பாரிய அளவிலான பொதுப் பயன்பாட்டு மற்றும் வர்த்தகப் பயன்பாட்டு சார்ஜ் மையங்கள் என மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான முழுமையான ஏற்பாடுகளையும் Hayleys Mobility வழங்குகின்றது. நாடெங்கிலும் சார்ஜ் செய்வதற்கான வலையமைப்பைத் தோற்றுவித்து, சௌகரியத்தை மேம்படுத்தி, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் உரிமையாளர்கள் கொண்டுள்ள தயக்கங்களைப் போக்குவதற்கும் இக்கூட்டாண்மை உதவுகின்றது.  மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112 222 222 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக Hayleys Mobility நிபுணத்துவ அணியை தொடர்பு கொள்ளவும் அல்லது www.hayleysmobility.com என்ற இணையத்தளத்தை நாடவும்.