Singer ஸ்ரீ லங்கா PLC Kapruka Holdings PLC உடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தி தமது மின் சாதனங்களையும் வீட்டுத் தளபாடங்களையும் Kapruka இன் Partner Central தளத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கூட்டிணைவு, இலங்கையின் நம்பகமான முதன்மை வர்த்தகநாமமான Singer, நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு e-commerce தளமான Kapruka இன் வலுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் இணைந்து தரமான பொருட்களை உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதாகக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் […]
Category: TAMIL
இலங்கையின் சத்திரசிகிச்சை பராமரிப்பை மீள்வரையறை செய்ய வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவாக்கங்களை முன்னெடுக்கும் நைன்வெல்ஸ் வைத்தியசாலை
நைன்வெல்ஸ் வைத்தியசாலை (Ninewells Hospital), தனது புதிய கட்டட விரிவாக்கத்திற்கான அடிக்கல்லை நடுவதன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்துவதில் ஒரு உறுதியான முன்னேற்றத்தை குறிக்கிறது. வைத்தியசாலையின் முக்கிய பங்குதாரர்கள், கூட்டாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கலந்துகொண்ட இந்நிகழ்வானது, வைத்தியசாலையின் ஒரு உருமாற்ற நிலையின் ஆரம்பத்தைக் கொண்டாடியது. இந்த வளர்ச்சியானது, மகளிர் மற்றும் சிறுவர் சுகாதாரப் பராமரிப்பில் நைன்வெல்ஸ் வைத்தியசாலை கொண்டுள்ள வலுவான அடித்தளத்திற்கு அப்பால், மிகவும் விரிவான மற்றும் எதிர்காலத்திற்கு […]
பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி இலங்கை ஏற்றுமதியாளர்களின் தேசிய சபையின் தங்க விருது வென்று கோழி இறைச்சி ஏற்றுமதித் துறையில் தனது முதன்மை நிலையில் மேலும் முன்னோக்கி செல்கின்றது.
தேசிய ஏற்றுமதியாளர்கள் மன்றம் (NCE) 33 ஆவது தடவையாக ஏற்பாடு செய்த வருடாந்த விருது வழங்கும் விழாவில் பைரஹா ஃபார்ம்ஸ் நிறுவனம் கோழி இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தித்துறையில் (நடுத்தரப் பிரிவில்) தங்க விருதை வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த விருது இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நிறுவனத்தின் சிறப்பான பங்களிப்பையும் மதிப்பீட்டு ஆண்டின் அதன் வலுவான செயற்திறன்களையும் பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டுகின்றது. NCE விருதுகள் இலங்கை ஏற்றுமதியாளர்களின் ஸ்திரமான சிறப்பு நிலையையும் உயர் பெறுமானத்தையும் பறைசாற்றும் […]
பிரிட்டனின் DCTS திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடைத்துறை போட்டித்திறன் மிக்க நன்மையைப் பெற்றுள்ளது
2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) திருத்தப்பட்ட வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (DCTS), இலங்கையின் ஆடைத் துறைக்கு ஒரு தெளிவான வாய்ப்பை வழங்குகிறது. இது குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதோடு, ஒரு முக்கியமான சந்தையில் அவர்கள் வலுவான இடத்தைப் பெறுவதற்கும் வழிவகுக்கிறது. இந்தத் திருத்தப்பட்ட திட்டத்தின் உண்மையான பலம் அதன் நடைமுறைத்தன்மையில் உள்ளது. உற்பத்தி மூல விதிகளை எளிமையாக்குவதன் மூலமும், மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் அதிக […]
நீர்கொழும்பு நகரில் தனது புதிய கிளையைத் திறந்த HNB
இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HNB, தனது வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய கிளை ஒன்றை நீர்கொழும்பில் திறந்துள்ளது. இது நீர்கொழும்பு, புனித ஜோசப் வீதி, இலக்கம் 125 என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது. HNB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பள்ளேவத்த, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ரசிக்க மல்லவஆராச்சி, HNB இன் நிறைவேற்று அதிகாரமுடைய துணைத் தலைவரும் வலையமைப்பு வணிகப் பிரிவுத் தலைவருமான சுபுன் டயஸ் உள்ளிட்ட வங்கியின் சிரேஷ்ட […]
மாற்றத்தைத் தூண்டும் செயல்பாடுகளை உருவாக்குதல்: பிரிட்டிஷ் கவுன்சில் இளைஞர் காலநிலை தூதுவர்கள், ‘The Climate Spark’ நிகழ்வில் காலநிலை மாற்றத்தை குறைக்க 24 திட்டங்களை அறிமுகப்படுத்தினர்
இளம் பருவத்தினர் காலநிலை மாற்றத்திற்கு சிறந்த தூதுவர்களாக இருக்க முடியுமா? ஆமாம், இதற்கான தரவுகளை இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) சமீபத்திய திட்டங்கள் மூலம் நிரூபித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், 114 காலநிலை செயல் திட்டங்களில் 770 இளைஞர்களை இணைத்து, அவர்களின் நேரடி தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் சமீபத்திய திட்டமான பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதுவர்கள் [University Youth Climate Ambassadors- (YCA) திட்டத்தில் பங்கேற்றவர்கள், 2026 மார்ச் 19 ஆம்திகதி BMICH-இல் நடைபெற்ற […]
இலங்கையில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு உறுதுணையாக DFCC ஆலோகா மற்றும் Chrysalis ஆகியன ஒன்றிணைந்துள்ளன
DFCC வங்கி பிஎல்சி அறிமுகப்படுத்தியுள்ள DFCC ஆலோகா என்ற பெண்களுக்கான விசேட தீர்வுத் திட்டத்தின் கீழ், நாடெங்கிலும் நுண், சிறிய, மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு உறுதுணையாக DFCC ஆலோகா மற்றும் Chrysalis ஆகியன ஒன்றிணைந்துள்ளன. பெண்கள் தமக்கு தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளவும், தமது தொழில்முயற்சிகளை வளர்ச்சி பெறச் செய்யவும், மற்றும் சந்தை வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ளவும் உதவுவதே இதன் நோக்கம். சமூகத்தின் அடிமட்டத்தில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் மிகவும் […]
2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர்தினத்தை கொண்டாடிய HNB FINANCE
இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதிச் சேவை வழங்கநரான HNB FINANCE, தனது பணியாளர் படையில் பெண்களின் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அவர்களை மேம்படுத்தும் விதமாகவும் 2026 சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பெண் ஊழியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கலந்துரையாடல் அமர்வுகள் மூலம் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு நாவலையிலுள்ள HNB Finance PLC தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இதில் நாடு முழுவதிலுமுள்ள கிளை வலையமைப்பைச் […]
Coca-Cola அறக்கட்டளை மற்றும் Hayleys பிளான்டேஷன்ஸ் கூட்டு முயற்சி: பெருந்தோட்டத் துறையில் இலங்கையின் முதலாவது 100% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மறுசுழற்சி நிலையம் திறப்பு
SWYFT திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது பூச்சிய கார்பன் வெளியீட்டு (Zero-emission) மூலப்பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டமானது தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்துடன் இணைந்து, coca-cola அறக்கட்டளையின் (TCCF) நிதியுதவியுடன், ஜனதாக்ஷன் (Janathakshan) நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், நெப்டியூன் ரீசைக்கலர்ஸ் (Neptune Recyclers) இதன் மறுசுழற்சி பங்காளராகச் செயல்படுகிறது. உலக மறுசுழற்சி தினத்தை முன்னிட்டு, Circular Symbiosis for Waste-to-Resource Value எனும் கருப்பொருளின் கீழ், ‘சாமர்செட் எகோ’ (Somerset ECO) […]
ஒரு மில்லியன் இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் வலுவூட்டலை வழங்க FOUNDATION.LK “DiGiSavi” திட்டத்தை அறிமுகப்படுத்தியது
இலங்கை மக்கள் டிஜிட்டல் உலகத்தை பாதுகாப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் கையாள்வதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் வளங்களை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற முயற்சியான FOUNDATION.LK, தனது புதிய திட்டமான “DiGiSavi” ஐ 2026 மார்ச் 24 அன்று இலங்கை அறக்கட்டளை நிறுவன (SLFI) கேட்போர் கூடத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. பெருகிவரும் டிஜிட்டல் சமூகத்தில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் அதேவேளையில், பொறுப்புள்ள டிஜிட்டல் பிரஜைகளை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிமுக நிகழ்வு, இலங்கையின் அனைவரையும் […]
