உலகளாவிய வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சு நிறுவனமும் இலங்கையில் Dulux Paints உற்பத்தியாளருமான AkzoNobel, காலி கலங்கரை விளக்கத்தை அண்மையில் புனரமைப்பு செய்து பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதன் மூலம், நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய தலங்களில் ஒன்றைப் பாதுகாக்க உதவியுள்ளது. உலக பாரம்பரியத் தளமான காலி கோட்டைக்குள் அமைந்துள்ள காலி கலங்கரை விளக்கம், இலங்கையின் மிகப் பழமையான கலங்கரை விளக்க நிலையமாகத் திகழ்கிறது. காலி கலங்கரை விளக்கம் கோட்டைக்குள் மிகவும் எளிதில் அடையாளம் காணக்கூடிய முக்கிய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும், […]
Category: TAMIL
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி தொடர்ந்து 10 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி Rotary Colombo East உடன் இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்த இரத்த தான நிகழ்வு தொடர்ச்சியாக 10 ஆவது தடவையாகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. சமூக நலன் மற்றும் உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக நிறுவனம் கொண்டுள்ள நீண்ட கால அர்ப்பணிப்பு இந்நிகழ்வின் மூலம் மேலும் உறுதியாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை கொழும்பு 06, காலி வீதி, 541 ஆம் […]
VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்கிறது
அரசாங்கங்கள் மற்றும் குடிமக்களுக்கான பாதுகாப்பான பயணச் சேவைகளை வலுப்படுத்தும் சர்வதேச அளவில் நம்பிக்கைக்குரிய முன்னணித் தொழில்நுட்ப சேவை நிறுவனமான VFS Global, கொழும்பில் அமைத்துள்ள அதிநவீன கொரிய விசா விண்ணப்ப நிலையத்தின் ஊடாக இலங்கையில் தென்கொரிய விசா சேவைகளை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இது நாட்டில் உள்ள கொரிய விசா விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மேம்பட்ட மற்றும் சௌகரியமான விசா விண்ணப்ப அனுபவத்தை அளிக்கும். 2026 ஆகஸ்ட் 21 முதல், இலங்கை முழுவதும் உள்ள கொரிய விசா விண்ணப்பதாரர்கள் இணையவழி […]
120 நாடுகள், 6,000 விற்பனை நிலையங்கள். இலங்கையில் தடம் பதிக்க தயாராகும் KUKA HOME
உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வீட்டலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான KUKA HOME, இலங்கையிலான தனது முதலாவது காட்சியறையை கொழும்பில் திறந்து வைத்துள்ளது. நவீன வாழ்க்கைக்கேற்ற சமகாலத்தளபாடங்களை நியாயமான விலையில் வழங்கி உலகப் புகழ்பெற்ற இச்சர்வதேச வர்த்தக நாமத்தை, இலங்கையில் Finco Holdings நிறுவனத்தின் தளபாட விற்பனைப் பிரிவான Finco Homes மூலமாக உத்தியோகபூர்வமாகப்பிரதிநிதித்துவப்படுத்துகிறது. “KUKA HOME நிறுவனம் நான்கு தசாப்தங்களுக்கு மேல் விருதுகள் வென்ற வடிவமைப்புக்கள், காப்புரிமை பெற்றதொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச நிபுணத்துவம் ஆகியவற்றை இலங்கைக்கு அறிமுகப்படுத்துகிறது. உலகளாவிய ரீதியில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,000க்கும் அதிகமான விற்பனை நிலையங்களைக் கொண்ட இவ் வர்த்தக நாமம், விரிவானவாடிக்கையாளர் தளத்தைச் சென்றடையும் வகையில் நவீன வாழ்வியலுக்கேற்ற பலதரப்பட்ட தயாரிப்புகளை வழங்குகின்றது. சர்வதேச வடிவமைப்புத் தரம் மற்றும் இலங்கை இல்லங்களின் எதிர்பார்ப்புகளை துல்லியமாகப் பூர்த்தி செய்யக்கூடிய ஒருதளபாட வர்த்தக நாமத்திற்கான தேவை சந்தையில் இருப்பதை Finco Homes ஆகிய நாம் கண்டறிந்தோம். KUKA HOMEநிறுவனத்தின் வடிவமைப்புத் திறன், உன்னதமான உற்பத்தித்தன்மை, தயாரிப்புகளின் விரிவு மற்றும் சர்வதேச நற்பெயர் என்பனஇலங்கைச் சந்தைக்கு மிகச் சிறந்த பொருத்தங்களாகியுள்ளன,” என Finco Homes நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுஅதிகாரி சப்ராஸ் கரீம் தெரிவித்தார். 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட KUKA HOME, இத்தாலியின் மிலான் நகரில் உள்ள வடிவமைப்பு மையத்தின் வழிகாட்டலுடன்சீனா, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் 14 தயாரிப்பு நிலையங்களை இயக்கி வருகின்றது. ஐரோப்பாமற்றும் வட அமெரிக்காவின் முன்னணி வடிவமைப்பு நிறுவனங்களுடனான கூட்டுறவுச் செயற்பாடுகளுக்காகவும் இந்நிறுவனம் உலகளவில் உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளது. “ஆராய்ச்சி, தேர்ந்த வடிவமைப்பு, கைவினைத்திறன், தொழில்நுட்பம் மற்றும் நிலையான உற்பத்தி முறைகளுக்கு அதிகமுக்கியத்துவமளிக்கும் ஒரு சர்வதேச வீட்டலங்காரப் பொருட்கள் வர்த்தகநாமத்துடன் கைகோர்ப்பதில் நாம்பெருமகிழ்ச்சடைகிறோம். இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், பயன்பாடு மற்றும் பாணி ஆகியவற்றைஒருங்கிணைத்து, விருது வென்ற வடிவமைப்புகளையும் பன்முகத்தன்மை கொண்ட தயாரிப்புகளையும் வழங்குவதன் மூலம்நாட்டின் இல்லங்களுக்கான உள்ளக அலங்காரத் துறையில் KUKA HOME ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக்கொண்டுவருகிறது,” என Finco Homes நிறுவனத்தின் பணிப்பாளர் தருஷ வீரசூரிய தெரிவித்தார். ஒரு முழுமையான கருத்தாக்க விற்பனையகமாக (Concept Store) வடிவமைக்கப்பட்டுள்ள இக்காட்சியறை, வாடிக்கையாளர்கள்தங்களது இல்லங்களையும் வாழ்க்கை முறைகளையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் காட்சிப்படுத்தும் வகையில்அமைக்கப்பட்டுள்ளது. KUKA HOME-இன் புத்தாக்கம் மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட வடிவமைப்புத் தத்துவத்தைப்பிரதிபலிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பம் சார்ந்த வீடுகளுக்கான Smart Living கருத்தாக்கங்களும் இத்தயாரிப்புகளில்உள்ளடங்கியுள்ளன. வாடிக்கையாளர்கள் www.kukahome.lk எனும் இணையத்தளத்தினூடாகவும் இத்தயாரிப்புகளைப் பார்வையிட முடியும். சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையே KUKA HOME-இன் வர்த்தக தத்துவத்தின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதுடன் காரபன் தடத்தைக் (Carbon Footprint) குறைப்பதற்கும், சுற்றாடல் விழிப்புணர்வு கொண்ட உற்பத்தி முறைகளை ஊக்குவிப்பதற்கும் தொடர்ச்சியாகப் பங்காற்றிவருகின்றது. இல. 12, அல்ப்ரெட் ஹவுஸ் கார்டன்ஸ், கொழும்பு 03, எனும் முகவரியில் அமைந்துள்ள KUKA HOME காட்சியறை திங்கள் முதல்சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.
Domino’s ஸ்ரீ லங்கா இலங்கையில் 15 வருட பூர்த்தியை நீண்ட Pizza உடன் கொண்டாடுகிறது
உலகின் மாபெரும் pizza வர்த்தக நாமமான Domino’s, இலங்கையில் தனது 15 வருட பூர்த்தியை, நீண்ட pizza உடன் கொண்டாடியது. இந்த மைல்கல்லை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் மற்றும் பங்காளர்களை ஒன்றிணைத்திருந்தது. 2011 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரவேசித்தது முதல், Domino’s இனால் சுமார் இரண்டு மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கொண்டாட்டங்கள், குடும்ப நிகழ்வுகள், இரவு உணவு தேடல்கள் மற்றும் தினசரி முக்கிய தருணங்களில் பங்கேற்றுள்ளது. இந்தப் பயணம் தொடர்பில் Domino’s ஸ்ரீ […]
தெற்காசியாவின் மிகப்பெரிய முதியோர் பராமரிப்பு நிறுவனத்தின் புதிய அத்தியாயம் ஆரம்பம்
தெற்காசியாவின் முதியோர் பராமரிப்புத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ரோயல் நர்சிங் ஹோம் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைமையகம், இலக்கம் 82, பார்ன்ஸ் பிளேஸ், கொழும்பு 07 என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் போர்டியா மெடிக்கல் நிறுவனத்தை விஞ்சி, 1,600க்கும் மேற்பட்ட நிரந்தர சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களைப் பணியமர்த்தியுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம், கல்கிசை, மஹரகம, பன்னிப்பிட்டிய, கடுவலை, மாலபே, ஹங்வெல்ல, அத்துருகிரிய மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஆகிய இடங்களில் […]
உலகளாவிய பயன்பாட்டிற்காக இலங்கையில் உருவாக்கப்பட்ட TapID உறவு முகாமைத்துவத் தளத்தை Synapseus Technologies அறிமுகப்படுத்துகிறது
ஒரு வலையமைப்பு நிகழ்வில் அறிமுகமாகும் ஒருவர், அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்புகொள்ளப்படாமல் போகலாம். பரிமாறிக்கொள்ளப்படும் வர்த்தக அட்டைகள் சில நாட்களுக்குப் பின்னர் ஒரு இழுப்பறையில் கிடக்கலாம். இதுபோன்ற காரணங்களால், ஆரம்பத்தில் உருவாகும் பல மதிப்புமிக்க தொழில்முறை தொடர்புகளும் வர்த்தக வாய்ப்புகளும் தொடர்ந்து வளராமல் போகின்றன. இந்தச் சவாலுக்கு தீர்வாக, Synapseus Technologies இலங்கையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வர்த்தக அட்டை மற்றும் உறவு முகாமைத்துவத் தளமான TapID-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பாரம்பரிய NFC வர்த்தக அட்டையைத் தாண்டி, புதிய […]
Vito Wood Fired Pizza இன் புதிய கிளை City of Dreams இன் The Shoppes இல் திறந்துவைப்பு
இலங்கையின் மிகத் துரிமாக வளர்ந்து வரும் உணவகத் துறையில் தனது வர்த்தகநாமத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், Vito Wood Fired Pizza (www.vitopizza.lk) தனது 6வது கிளையை City of Dreams இன் The Shoppes இல் திறந்துள்ளது. இந்த புதிய கிளையின் திறப்புடன், Vito Pizza உலகப் புகழ்பெற்ற இத்தாலிய விறகு அடுப்பு பீட்சாவை இலங்கையின் முன்னணி சொகுசு ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் உணவு மையமாகத் திகழுமொரு இடத்திற்குக் கொண்டு வருகிறது. 2017 இல் […]
சிலோன் வாகன இறக்குமதியாளர் சங்கத்தினர் பெருமதிப்புமிக்க Motor Rally 2026 ஐ அறிமுகப்படுத்துகின்றனர்
சிலோன் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் (CAIA) ஏற்பாடு செய்யப்பட்டு, CDB Finance PLC நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் நடாத்தப்படும் Motor Rally 2026 வரும் 2026 ஓகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாட்டின் முன்னணி வாகன இறக்குமதியாளர்கள், வர்த்தகப் பங்காளிகள் மற்றும் வாகன ஆர்வலர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, வாகனத் துறையின் பன்முகத்தன்மை மற்றும் நவீன கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுவதோடு, தொழில்முறைத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதை இந்நிகழ்வு நோக்காகக் கொண்டுள்ளது. இலங்கையில் பொறுப்புமிக்க வாகனக் கலாச்சாரத்தையும், […]
Odiliya Homes & Residencies குழுமத்தின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதுவராக லசித் மலிங்க நியமனம்
இலங்கையின் சொகுசு குடியிருப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு முன்னணி பிராண்டான Odiliya Homes & Residencies குழுமத்தின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதுவராக, உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் எதிர்கால ஊக்குவிப்புத் திட்டங்கள், சர்வதேச சந்தை ஈர்ப்பு மற்றும் பிராண்ட் பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு தனித்துவமான பந்துவீச்சாளராக உலக கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் தனது பெயரைப் பொறித்த லசித் […]
