Cinnamon Grand கொழும்பில் Lassana.com தனது புதிய விற்பனை நிலையத்தை திறந்துள்ளது

இலங்கையின் முன்னணி மலர் மற்றும் அன்பளிப்பு வர்த்தக நாமமான Lassana.com, தனது புதிய மலர் விற்பனைநிலையத்தை அண்மையில் Cinnamon Grand கொழும்பில் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இந்த நகர்வானதுகொழும்பின் விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறைத் துறையில் வர்த்தக நாமத்தின் இருப்பை வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மலர் அன்பளிப்புகள் மற்றும் மலர் சார்ந்த திருமண அனுபவங்களை வசதியாகப்பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. கொமர்ஷல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க பிரதம விருந்தினராகவும், Lassana.com வர்த்தக நாமத்தூதுவரும், முன்னாள் இலங்கையின் உலக அழகியுமான அனுதி குணசேகர கௌரவ விருந்தினராகவும்கலந்துகொண்டு இந்தப் புதிய விற்பனை நிலையத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர். Lassana  நிறுவனக்குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி லசந்த மாலவிகே, மலர் பிரிவின்தலைவர் Piet De Jong , Cinnamon Grand  கொழும்பின் பொது முகாமையாளர் நஸூமி அஷார், Lassana Flora Weddings இன் ஆடம்பரதிருமணங்களின் முகாமையாளர் யூசுப் சிராஜுதீன் ஆகியோருடன் பெருமளவிலான விருந்தினர்களும்நலன்விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். புதிய Lassana.com விற்பனை நிலையமானது, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மலர்கள், மலர் அலங்காரங்கள்மற்றும் அன்பளிப்புத் தீர்வுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டல் விருந்தினர்கள், நிறுவனவாடிக்கையாளர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நகரத்தின் மையப்பகுதியில் உயர்தர மலர்அன்பளிப்புகளை வசதியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. கொழும்பின் மிகச் சிறந்தவிருந்தோம்பல் இடங்களுள் ஒன்றான இந்த ஹோட்டலின் வரவேற்பறையில் அமைந்துள்ள புதிய மலர் விற்பனைநிலையமானது, நேர்த்தி, வசதி மற்றும் Lassana.com வர்த்தக நாமத்துடன் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையானதரம் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இந்த விற்பனைய நிலையமானது நிறுவனத்தின் மலர் கலைத்திறன் மற்றும்திருமண நிகழ்வு நிபுணத்துவத்தை வெளிப்படுத்தும் ஓர் இடமாகவும் செயல்படும். இந்த விரிவாக்கம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நிறுவனத் தலைவரும் முகாமைத்துவப்பணிப்பாளருமான வைத்திய கலாநிதி லசந்த மாலவிகே, “இலங்கையின் மிகப் பரந்த மலர் மற்றும் அன்பளிப்புச்சூழலமைப்பை உருவாக்கும் Lassana.com இன் பயணத்தில், எமது Cinnamon Grand விற்பனை நிலையத்தின் அமைவானது ஒருமுக்கியமான மைல்கல்லாகும். இந்தக் கூட்டாண்மையானது, தடையற்ற மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர்அனுபவத்தை வழங்குவதற்காக நாட்டின் முன்னணி மலர் வர்த்தக நாமத்தையும் இலங்கையின் மிகவும் மதிக்கப்படும்விருந்தோம்பல் வர்த்தக நாமங்களில் ஒன்றையும் ஒன்றிணைக்கிறது. நேரடியாக வரும் வாடிக்கையாளர்களுக்குச்சேவையாற்றுவதற்கு அப்பால், இந்த விற்பனை நிலையமானது பல வழிகளிலான அன்பளிப்பு மையமாகவும்செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் Lassana.com ஊடாக மேற்கொள்ளும் கொள்வனவுகளை Cinnamon Grand இல் வசதியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த விற்பனை நிலையத்தின் மலர் சேகரிப்புகளுடன், Cinnamon Grand இன் புகழ்பெற்ற இனிப்பு வகைகளும் (confectionery), மின்சார வாகனங்கள் ஊடாக கொழும்பு 1 முதல் 4 வரையான பகுதிகளில் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. உயர்தர மலர்கள், சிறந்த இனிப்பு வகைகள், வசதிமற்றும் நிலைபெறுதன்மை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்ததருணங்களைக் கொண்டாடுவதை நாங்கள் முன்பை விட எளிதாக்குகிறோம்” என்று தெரிவித்தார். அன்பளிப்பு வழங்குவது குறித்த தனது கருத்துகளை வெளியிட்ட Lassana.com வர்த்தக நாமத் தூதுவர் அனுதி குணசேகர, “மலர்கள் அவற்றின் அழகு அல்லது நறுமணத்திற்காக மட்டும் போற்றப்பட வேண்டியவை அல்ல என்று நான் நம்புகிறேன். அவை நமக்கொரு பாடத்தையும் கற்றுக்கொடுக்கின்றன. மலர்கள் பூக்கின்றன, வாடுகின்றன, மீண்டும் பூக்கின்றன. மகிழ்ச்சியும் கிட்டத்தட்ட அப்படித்தான். அது சிறிது காலம் நம்மை விட்டு விலகியிருந்தாலும், மீண்டும் திரும்பும்இயல்புடையது. மலர்கள் நமக்கு அதனை நினைவூட்டுகின்றன என்று நான் நினைக்கிறேன்” என்றார். Cinnamon Grand  கொழும்பின் பொது முகாமையாளர் நஸூமி அஷார் கருத்துத் தெரிவிக்கையில், ” Cinnamon Grand  கொழும்பில், எங்கள் விருந்தினர்களுக்கு நாங்கள் வழங்கும் அனுபவங்களை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள்தொடர்ந்து தேடி வருகிறோம். Lassana.com உடனான எமது கூட்டாண்மையானது, சிறந்த சேவை, ஆக்கத்திறன் மற்றும்வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் அர்ப்பணிப்பைப் பகிர்ந்துகொள்ளும் இரண்டு நம்பகமான இலங்கை வர்த்தகநாமங்களை ஒன்றிணைக்கிறது. இந்த விற்பனை நிலையத்தின் இணைப்பானது எங்கள் விருந்தினர்களுக்கு வசதியைச்சேர்ப்பது மட்டுமன்றி, Cinnamon Grand கொழும்புக்கு உரித்தான வாழ்க்கை முறை மற்றும் கொண்டாட்டஅனுபவங்களையும் வளப்படுத்துகிறது. Lassana.com ஐ எமது ஹோட்டலுக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், எங்கள் விருந்தினர்களுக்கு பல மறக்க முடியாத தருணங்களை உருவாக்கும் வெற்றிகரமான கூட்டாண்மையைஎதிர்பார்க்கிறோம்” என்றார். Lassana.com தனது சில்லறை வர்த்தகத் தொடர்பாடல் மையங்களின் வலையமைப்பை எதிர்காலத்தில் மேலும்விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அன்பளிப்புத் தீர்வுகளை மேம்படுத்தவும், புதியமூலோபாய விருந்தோம்பல் கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்தவும், அத்துடன் ஆக்கபூர்வமான மலர் மற்றும்அன்பளிப்புச் சேகரிப்புகளின் அறிமுகத்துடன் தொடர்ந்து புதுமைகளை புகுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடிமட்டத்திலிருந்தே அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்: இலங்கை முழுவதுமுள்ள தொழில்முனைவோரைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தும் லங்கா லயன்ஸ் அறக்கட்டளை சிறு கடன் திட்டம் 

இலங்கையிலுள்ள லயன்ஸ் கழகத்தின் கீழ் மனிதநேய மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட அறப்பணிப் பிரிவான, லங்கா லயன்ஸ் அறக்கட்டளை (Lanka Lions Foundation – LLF), பாரம்பரிய வங்கி வசதிகளை அணுக முடியாத, பொருளாதார ரீதியாக சிறந்த வகையில் செயற்பட்டு வருகின்ற, குறைந்த வருமானம் உடைய நபர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்ட தனது நீண்டகால சிறு கடன் (Micro loan) திட்டத்தின் மூலம் அடிமட்டத்திலுள்ள தொழில்முனைவோர் மத்தியில் தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 2026 ஏப்ரல் […]

XPENG மற்றும் AVATR ஊடாக நிறைவேற்று அதிகாரிகளுக்கான பிரீமியம் போக்குவரத்து திறனை வெளிப்படுத்த 45 Under 45 CEO விருதுகளுடன் இணைந்த Evolution Auto

இலங்கையில் XPENG மற்றும் AVATR வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Evolution Auto நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த மின்சார வாகன போக்குவரத்துத் தீர்வுகள் மூலம் தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்தை ஆதரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், புகழ்பெற்ற ’45 Under 45 CEO Awards 2026′ நிகழ்வுடன் கைகோர்த்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா Global CEO Forum (Pvt) Ltd. நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் வணிகத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொலைநோக்குப் பார்வை, […]

Eswaran Brothers மாற்றத்தைக் கொண்டுவரும் தலைமைத்துவப் பயணத்தின் மூலம் பெண்களை வலுப்படுத்துகிறது

பெண்களின் அதிகாரமளிப்பை மேம்படுத்துவதற்கும் வலுவான தலைமைத்துவ வரிசையை உருவாக்குவதற்குமான தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இலங்கையின் முன்னணி தேயிலை உற்பத்தியாளரான Eswaran Brothers Exports (EB) தனது முக்கிய மகளிர் தலைமைத்துவ முன்னெடுப்பான She Transforms என்ற, தனிப்பயனாக்கப்பட்ட ஆறு மாத தலைமைத்துவ மேம்பாட்டுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. விருது பெற்ற தலைமைத்துவ நிபுணர் செனலா ஜெயசூரியாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டு Value for Women அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்தத் திட்டம் தலைமைத்துவ திறன் மேம்பாடு, உள்ளடக்கம் மற்றும் […]

KIU பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் அதிகூடிய புள்ளிகள் சதவீதத்தை பெற்று சாதனை

இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக, உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் (Periodic Institutional Review),  அனைத்து அரசு சாரா பல்கலைக்கழகங்கள் மத்தியிலும் KIU பல்கலைக்கழகம் அதிகூடிய ஒட்டுமொத்த புள்ளிகள் சதவீதத்தை (85.86%) பதிவு செய்துள்ளது. உயர்கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த காலமுறை நிறுவன மீளாய்வு என்பது இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களை மதிப்பிடுவதற்கு காணப்படும் மிகவும் விரிவான செயல்முறைகளில் ஒன்றாகும். நிர்வாகம், முகாமைத்துவம், நிதி நிலைத்தன்மை, உட்கட்டமைப்பு வசதிகள், கல்வித் […]

மவுண்ட் லேவினியா ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்ற BWIO International Awards 2026  BWIO சர்வதேச விருது விழா

அமெரிக்காவைத் தலைமையகமாக கொண்ட Business World International Organization INC-USA அமைப்பு ஏற்பாடு செய்த BWIO International Awards 2026  BWIO சர்வதேச விருது விழா 2026, மே 16 அன்று மவுண்ட் லேவினியா ஹோட்டலில் நடைபெற்றது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச வணிக விருது வழங்கும் விழாவாகக் கருதப்படும் இவ்விழாவில், பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்குதல், தலைமைத்துவம், புதுமை மற்றும் வெற்றி ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் […]

140 ஆண்டுகால சுவைமிகு நினைவுகளுடன், இலங்கையில் 65ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Coca-Cola

உலக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள Coca-Cola, வெறும் குளிர்பானம் என்ற வரம்பைத் தாண்டி, கடந்த 140 ஆண்டுகளாக நுகர்வோரின் பேராதரவைப் பெற்ற உலகளாவிய வர்த்தக நாமமாகத் திகழ்கிறது. கடந்த 1886 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி, அட்லாண்டாவில் உள்ள ‘ஜேக்கப்ஸ்’ (Jacobs) மருந்தகத்தில் டாக்டர் ஜோன் பெம்பர்டன் (Dr. John Pemberton) என்பவரால் முதன்முறையாக நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இந்த Coca-Cola-வின் பயணம் ஆரம்பமானது. அந்த வகையில், இலங்கையிலும் பல தலைமுறைகளின் நம்பிக்கையை […]

இலங்கையில் பூனைகள் கைவிடப்படுவதைத் தடுக்க TikTok மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் CocoBunny Family

உங்களிடம் ஒரு செல்லப் பூனை இருந்தால், வீட்டில் உண்மையான பாஸ் (boss) யார் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நள்ளிரவில் ஓடிப்பிடித்து விளையாடுவது, அதிகாலையிலேயே அசுத்தமான படுக்கைப் பெட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, அவை தங்களின் ராஜ்ஜியத்தை நம் வீடுகளில் நடத்துகின்றன. இத்தகைய குட்டிப் பூனைகளின் குறும்புத்தனங்களுக்கும் கோபங்களுக்கும் ஈடுகொடுத்து, நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவற்றைச் சுற்றியே அமைத்துக் கொள்கிறோம். ஏனெனில், அவை வெறும் செல்லப்பிராணிகள் அல்ல் நம் வீட்டுப் பிள்ளைகள். இப்படிப்பட்ட பூனைகளின் மீதான […]

DB Automation நிறுவனம் Zebra Technologies நிறுவனத்தின் Partner of the Year விருதை வென்றுள்ளது

இலங்கையில் மிகப் பெரிய அளவில் இயங்கும் Zebra Technologies நிறுவனத்தின் இணை நிறுவனமான  DB Automation நிறுவனம் “Partner of the Year” ‘ விருதைப் பெற்றுள்ளது. இது, வணிகத் தொழில்நுட்பம், தானியக்கம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றத் துறைகளில் அந்நிறுவனம் கொண்டுள்ள முதன்மை இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த விருதானது, புத்தாக்கம், தொழில்முறைச் சிறப்பு மற்றும் வாடிக்கையாளர் மையச் சேவை வழங்கல் ஆகியவற்றில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், Zebra Technologies உடனான அதன் வலுவான வணிகக் கூட்டாண்மையையும் பிரதிபலிப்பதாக […]

ஏழாவது ஆண்டாக உலகளாவிய Gaming Monitor சந்தையில் முதலிடத்தை தக்கவைத்து Samsung சாதனை

ஒவ்வொரு மில்லிசெக்கனும் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் தற்போதைய Gaming உலகில், Samsung Electronics நிறுவனம் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. செயல்திறன், துல்லியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்ற உலகளாவிய சந்தையில், Samsung தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகளவில் முதற்தர (No.1) Gaming Monitor வர்த்தக நாமமாக தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச தரவு நிறுவனத்தின் (IDC) சமீபத்திய தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் உலகளாவிய Gaming Monitor வருவாய் சந்தையில் […]