Tamil

Social share

More News

20k services img2(1)

இலங்கையில் மின்சார வாகனப் புரட்சி: 20,000 வாகன சேவைகளை பூர்த்தி செய்து BYD மற்றும் JKCG சாதனை

இலங்கையில் BYD நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), கடந்த ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 20,000 வாகன சேவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தச் சாதனையானது, இலங்கையில் புதிய சக்தி வாகனங்கள் (NEVs) எந்தளவிற்கு வேகமாகவும், பரவலாகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அத்துடன், அதிகரித்து வரும் இந்தத் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில், நாடு முழுவதும் வலுவான விற்பனைக்குப் […]
Read more
jaaf logo

வியட்நாம் எவ்வாறு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTAs)ஆடைத் துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தியது, மற்றும் அதிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

கடந்த பதினைந்து ஆண்டுகளில், வர்த்தகக் கொள்கை எவ்வாறு தொழில் வளர்ச்சியைத் தூண்டும் என்பதற்கு வியட்நாம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது, குறிப்பாக ஆடைத் துறையில். சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free Trade Agreements – FTAs), ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைந்திருத்தல் ஆகியவற்றில் மூலோபாய கவனம் செலுத்தியதன் விளைவே இந்த மாற்றமாகும். இலங்கை, வியட்நாமின் அனுபவத்திலிருந்து மதிப்புமிக்க படிப்பினைகளைப் பெற்று, அவற்றை அதன் தனித்துவமான சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும். இலங்கையின் […]
Read more
bc logo new

மொழிசார்ந்த கல்வி முறைமைகளை வலியுறுத்தும் புதிய நிலைப்பாட்டு அறிக்கையை பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டது

பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) ஆனது கல்வி கற்கும் மாணவர்களின் மொழிச் சூழலை நன்கு உணர்ந்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலும், உள்ளடக்கிய, சமமான மற்றும் பயனுள்ள கல்வியை ஆதரிக்கும் வகையிலும், “மொழி-சார்ந்த கல்வி முறைமைகளை” உருவாக்க, ஒரு புதிய உலகளாவிய நிலைப்பாட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  உலகெங்கிலும் உள்ள பல கல்வி முறைமைகளில், பாடசாலையில் பயன்படுத்தப்படும் மொழி, வீட்டில் பேசப்படும் மொழியிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். பன்மொழிச் சூழலில் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். ஆங்கிலக் கல்வி, இடப்பெயர்வு மற்றும் வாய்ப்புகளில் […]
Read more
image i 3

இலங்கைச் சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்: City of Dreams Sri Lanka-வின் Nüwa ஹோட்டலுக்கு 5 நட்சத்திர அங்கீகாரம்

கொழும்பு, வெள்ளிக்கிழமை, 08 மே 2026: தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka-வின் கீழ் இயங்கும் அதன் முதன்மைச் சொகுசு ஹோட்டலான Nüwa, தமக்குக் கிடைத்துள்ள கௌரவமிக்க 5-நட்சத்திர (5-Star) அங்கீகாரத்தைக் கௌரவிக்கும் வகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்வை நடத்தியது. பிராந்தியத்தின் முன்னைணி சொகுசு விருந்தோம்பல் இலக்குகளில் ஒன்றாக தனது நிலையை இந்த மைல்கல் சாதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. Nüwa-வில் உள்ள நேர்த்தியான […]
Read more
kedella

கேதல்ல (Kadella) எண்டர்பிரைசஸ் தனியார் நிறுவனத்துக்கு பீப்பல்ஸ் எக்சலன்சீ இரட்டை விருதுகள்

இலங்கையின் முன்னணி கட்டுமான நிறுவனமான கேதல்ல (Kadella)  எண்டர்பிரைசஸ் தனியார் நிறுவனம், பீப்பல்ஸ் எக்சலன்சீ விருது விழாவில் இரண்டு விருதுகளை வென்று, கட்டுமானத் துறையில் ஒரு நம்பகமான பெயர் என்ற தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், கேதல்ல எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு “இலங்கையின் புத்தாக்க தொழில்முனைவுத் தலைவர்” மற்றும் “இலங்கையின் மிகவும் நம்பகமான தொழில்முயற்சி நிறுவனம்” ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்த இரட்டை அங்கீகாரமானது, புதுமை, தரம் […]
Read more
acap 2

ACAP தனது மூலோபாய வர்த்தக மாற்றத்தை வெளிப்படுத்துகிறது: இலங்கையில் முதலீடுகளுக்கான புதிய எல்லையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளது

ACAP Stockbrokers (Pvt) Ltd. நிறுவனமானது, Stallion Consultancy நிறுவனத்தின் மேற்பார்வையில் தனது பயணத்தின் புதிய கட்டத்துக்குள் அடியெடுத்து வைக்கும் வகையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முதலீட்டு ஆலோசனையின் புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. மே 5 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இந்த நிதி சேவை நிறுவனமானது தனது புதிய வர்த்தகநாம அடையாளத்தை வெளியிட்டதுடன், ஆய்வு மையப்படுத்தப்பட்ட அணுகு முறைக்கான மாற்றத்தையும் அறிவித்தது. மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தக முன்னுரிமைகள், இலக்குகள் மற்றும் […]
Read more
image

டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் நியுசிலாந்து ரக்பியுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டின் ‘Ivuru Rakina Pawuru’ ஆரம்பம்

டோக்கியோ சீமெந்து குழுமம், மஹாவலி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Ivuru Rakina Pawuru திட்டத்தின் 2026 ஆம் ஆண்டின் மர நடுகைத் திட்டத்தை கண்டி பொல்கொல்ல வாவியின் அருகில் ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட நியுசிலாந்து ரக்பி அணியின் அங்கத்தவர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளை பாதுகாத்து மீள நிறுவுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்தத் திட்டம், அதன் பெறுமதிக்காக சர்வதேச சென்றடைவை பெற்றுள்ளதையும் அவதானிக்க […]
Read more
photo caption 01

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு உதவ CRIB அறிமுகப்படுத்தியுள்ள நிவாரண நடவடிக்கைகள்

இலங்கையின் கடன் தகவல் செயலகம் (CRIB), இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வழிகாட்டுதலின் கீழ், டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் மற்றும் சுழற்காற்றால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு உதவ சிறப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியானது, பேரழிவால் தற்காலிக நிதி சிரமங்களை எதிர்கொள்ளும் கடன் பெற்றவர்கள், நிவாரண காலத்தில் (அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை) அவர்களின் கடன் பதிவுகளில் தேவையற்று பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. புதிய நடவடிக்கைகளின் கீழ்: • பேரழிவினால் தாமதமான கட்டணங்கள் […]
Read more
photo caption 02

CRIB மற்றும் LRA இணைந்து AI ஆற்றல் பெற்ற டிஜிட்டல் டைனமிக் கிரெடிட் ரேட்டிங்ஸ் ((DDCR) மாதிரியின் மென் வெளியீட்டை அறிவிக்கின்றன

இலங்கை கடன் தகவல் பணியகம் (CRIB), தனது தொழில்நுட்பப் பங்காளரான லங்கா ரேட்டிங் ஏஜென்சியுடன் (LRA) இணைந்து, AI ஆற்றல் பெற்ற டிஜிட்டல் டைனமிக் கிரெடிட் ரேட்டிங்ஸ் (DDCR) மாதிரியின் மென் வெளியீடு தொடர்பில் அறிவித்துள்ளது. கடன் தகுதி மற்றும் மூலதன அணுகலுக்காக மதிப்பீடு செய்யப்படும்போது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) பயனடையும் விதத்தை மறு வடிவமைக்கவிருக்கும் ஒரு புரட்சிகரமான முயற்சியே இந்த மாதிரி. இக்காலத்தில் கடன் மற்றும் மூலதனத்தை அணுகுவதில் சிறு மற்றும் நடுத்தர […]
Read more
jaaf logo

முதலாம் காலாண்டு சவால்களுக்கு மத்தியிலும் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் இலங்கையின் ஆடைத் துறை

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8% வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், முறையான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்தச் சூழலை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு மாற்றுவதற்கான குறிப்பிட்ட வாய்ப்புகள் இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜனவரி மாதத்தில் 3 சதவீதமாக இருந்த ஏற்றுமதி வீழ்ச்சி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 11 சதவீதமாக அதிகரித்தது. உலகளாவிய ரீதியில் கேள்வி (Demand) குறைந்துள்ள அதேவேளையில், பெப்ரவரி இறுதியில் ஏற்பட்ட மத்திய கிழக்கு […]
Read more
main image

Cap Snap Lanka தனியார் நிறுவனம், ISO-FSSC 22000 உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற 6 சான்றிதழ்களை வென்று சாதனை

CSL குழுமத்துக்குச் சொந்தமான Cap Snap Lanka தனியார் நிறுவனம், ISO-FSSC 22000 உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற 6 சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் இந்த அனைத்து சான்றிதழ்களையும் வெறும் ஆறு மாத காலத்திற்குள் பெற்றுள்ளமை தனித்துவமானதொரு சாதனை ஆகும். இது தரம், பாதுகாப்பு மற்றும் உயர் சிறப்புக்கு Cap Snap Lanka கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. Bureau Veritas Sri Lanka இன் இலங்கைக்கான பொது முகாமையாளர் திரு ஷான் நாணாயக்கார மற்றும் […]
Read more
asia cup banner

Scara Live, இலங்கையில் நடைபெறும் தெற்காசியாவின் முதல் Tapeball ஆசியக் கோப்பையை நடத்தவுள்ளது

சர்வதேச விளையாட்டு, கேமிங் மற்றும் கலாச்சார நிறுவனமான Scara நிறுவனத்தின் நேரலை அனுபவப் பிரிவான Scara Live, ஆப்கானிஸ்தான் Tapeball கிரிக்கெட்டுடன் இணைந்து ‘Tapeball ஆசியக் கோப்பையை’ முதன்முறையாக நடத்தவுள்ளது. இப்போட்டிகள் மூலம் இலங்கை வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பெறுகிறது. இது சர்வதேச Tapeball கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட முதல் உத்தியோகபூர்வ கண்ட ரீதியான Tapeball போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.   இப் போட்டி, 2026 செப்டெம்பர் மாதம் கொழும்பு கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், […]
Read more

Contact us

editor.eyeviewsl@gmail.com

About us

From international business trends to local industry insights, our prime goal is to report a reliable view. Browse through the latest news, be it business, sustainability, lifestyle, technology and more!